Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒவ்வொரு வயதினரும் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

தூக்கம் என்பது ஒவ்வொரு மனிதனின் ஆரோக்கியத்தின் அளவுகோல் ஆகும். இக்காலகட்டத்தில் வேலைச்சுமையால் ஒரு மனிதன் சரியாக தூங்கும் கால இடைவெளியானது கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும் மனிதனின் உடல் ஆரோக்கியத்தில் தூக்கமானது முக்கிய பங்கு வகிக்கிறது. தூக்கம் இல்லாவிடில் பல்வேறு உடல் நலக்குறைவுகள் ஏற்படும். எனவே இந்த தூக்கத்திற்காக பலர் படாதபாடு படுகின்றனர். அதற்காக மருந்து மாத்திரைகளும் பலர் சாப்பிடுகின்றனர்.

இவ்வாறு சரியான தூக்கமின்மையால் ஒவ்வொருவரும் பல்வேறு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.ஒரு மனிதன் சரியான கால இடைவேளையில் தூங்குவதால் பல மன அழுத்தம் சார்ந்த பிரச்சனைகள் தீர்வதோடு ஆயுட்காலமும் நீடிக்கும் என்பது பல நிபுணர்களின் கருத்தாகும்.

உலக சுகாதார மையமானது ஒரு மனிதன் தூங்கும் கால அளவு எவ்வளவு நேரம் என அறிவித்துள்ளது.

• 1 to 3 மாத குழந்தைகள் : 14 – 17 hrs
• 4 to 11 மாத குழந்தைகள் : 12 – 15 hrs
• 1 to2 வயதுடையவர்கள் :11-14 hrs
• 3 to 5 வயதுடையவர்கள் :10-13 hrs
• 6 to13 வயதுடையவர்கள் :9-11 hrs
• 14 to17 வயதுடையவர்கள் :8-10 hrs
• 18to 25 வயதுடையவர்கள் :7-9 hrs
• 26 to 64வயதுடையவர்கள் :11-14 hrs
• 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் : 7 to 8 hrs

Exit mobile version