தங்கம் வெள்ளி வாங்குவோர் கவனத்திற்கு விலை சற்று உயர்வு!!
தங்கத்தின் விலை எப்போதும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். ஒவ்வொரு முறை தங்கத்தின் விலை உச்சத்தை அடையும். இதனால் நடுத்தர மக்கள் மிகவும் பதிக்கபடுவர்க்ள. சில சமயம் தங்கத்தின் விலை சரிவை சந்திக்கும். மேலும் தங்கம் விலை உயர்வதும் குறைவதும் இயல்பான நிகழ்வாக மாறிவிட்டது. ஆனால் தங்கத்தின் விலை ஏப்ரல் மாதம் முதல் உயர்ந்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னை, 1 கிராம் தங்கம் ரூ.5000 கும் கீழ் விற்கப்பட்டு வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் இதன் விலை அதிகரித்து காணப்படுகிறது.
மேலும் தொடர்ந்து தங்கம் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 1 சவரன் 44,520 ரூபாய் ஆக விற்கபடுகிறது. ஆனால் சில நாட்கள் முன்பு ஒரு சவரன் தங்கம் 46,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலை என்ற சாதனையை படைத்தது. பின்னர் கடந்த மாதம் சற்று விலை வீழ்ச்சி ஏற்பட்ட நிலையில் பிறகு ஏற்றம் கண்டு விட்டது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் 15 ரூபாய் உயர்ந்துள்ளது.ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,565 க்கும், சவரன் ரூ.44,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனை தொடர்ந்து வெள்ளியின் விலை சற்று அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் ஒரு கிராம் வெள்ளலி 8000 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 80, 000 ம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.