உடலில் மருக்கள் தோன்றுவது இயல்பான ஒரு விஷயம் தான்.ஆண்,பெண் யாருக்கு வேண்டுமானாலும் இந்த மருக்கள் தோன்றும்.இந்த மருக்கள் கை,கால்,கழுத்து,முதுகு,முகம் என்று எந்த இடத்திலும் வரலாம்.இந்த மருக்களை அகற்ற வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றலாம்.
தேவைப்படும் பொருட்கள்:-
1)சின்ன வெங்காயம் – நான்கு
2)தூள் உப்பு – சிறிதளவு
செய்முறை விளக்கம்:-
1.முதலில் நான்கு சின்ன வெங்காயத்தை எடுத்து அதன் தோலை நீக்கிவிடுங்கள்.பிறகு இதை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தப்படுத்துங்கள்.
2.அடுத்து இதை மிக்சர் ஜாரில் போட்டு விழுது பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.இந்த விழுதை ஒரு பில்டரில் போட்டு பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.உங்களது உடலில் மருக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அதற்கு ஏற்றார் போல் சின்ன வெங்காயம் பயன்படுத்துங்கள்.
3.சின்ன வெங்காய சாறை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிய பிறகு சிறிதளவு தூள் உப்பு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு குழைத்து கொள்ளுங்கள்.அவ்வளவு தான் மருக்களை உதிர வைக்கும் மருந்து தயாராகிவிட்டது.
4.இந்த வெங்காய உப்பு பேஸ்டை மருக்கள் மீது கலவை நன்கு உலர்ந்து வரும் வரை காத்திருக்க வேண்டும்.பிறகு வெது வெதுப்பான நீரில் காட்டன் பஞ்சை நினைத்து மருக்கள் மீது வைத்து துடைக்க வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து சில தினங்கள் செய்து வந்தால் மருக்கள் காய்ந்து உதிர்ந்துவிடும்.
5.மற்றொரு முறையில் மருக்களை அகற்றலாம்.அதற்கு முதலில் வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து அதில் உப்பு கலந்து கொள்ள வேண்டும்.இதை மருக்கள் மீது வைத்து ஒரு காட்டன் துணியை கொண்டு கட்டுப்போட வேண்டும்.
நான்கு முதல் ஐந்து மணி நேரம் கழித்து அந்த கட்டை பிரிக்கும் பொழுது மருக்கள் உதிர்ந்து வந்துவிடும்.
6.பூண்டு பற்களை நசுக்கி மருக்கள் மீது தடவி வந்தால் அவை சீக்கிரம் உதிர்ந்துவிடும்.அதேபோல் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு காட்டன் துணியில் ஊற்றி மருக்கள் மீது ஒத்தி எடுத்தால் அவை சீக்கிரம் உதிர்ந்துவிடும்.