சென்னை: சென்னை பேருந்து பயணிகளுக்கு வந்த இன்ப அதிர்ச்சி வரப்போகும் ஸ்மார்ட் அட்டை.
சென்னையில் உள்ள மக்கள் மின்சார ரயில் மெட்ரோ ரயில் பேருந்து போன்ற சேவைகளை அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர். இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பயண சீட்டு எடுப்பதே, பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையை மாற்றி அமைக்க தான் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்தி பயணச்சீட்டு எடுக்கும் முறையை இன்று அறிமுகப்படுத்த உள்ளார். இதன் மூலம் பேருந்து, ரயில்,மெட்ரோ ஆகிய சேவைகளுக்கும் ஒரே கார்டை பயன்படுத்தி டிராவல் செய்யலாம்.
ஏற்கனவே, சிங்காரச் சென்னை ஸ்மார்ட் அட்டை திட்டம் நடைமுறையில் உள்ளது. இது மெட்ரோ ரயிலுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் தற்பொழுது மேற்கூறிய மூன்று சேவைகளுக்கும் ஒரே ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்த வழிவகுத்துள்ளது தமிழக அரசு. இன்று பல்லவன் பணிமனையில் ரயில்களில் மட்டுமின்றி, மாநகரப் பேருந்துகளிலும் ஸ்மார்ட் அட்டை பயன்படுத்தும் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளார். இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய கலந்தாலோசித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிங்கார சென்னை ஸ்மார்ட் கார்டை மெட்ரோ நிலையத்தில் வைத்துள்ள ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்து பயணிக்கலாம். இதுபோல பேருந்துகளிலும் நடத்துனர் வைத்துள்ள மெஷின்களில் ஸ்கேன் செய்து பயணிக்கலாம். இதன் மூலம் பயணிகளுக்கு சில்லறை கவலை இல்லை. இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக எஸ்பிஐ வங்கியின் உதவியுடன் 50,000 அட்டைகளை இலவசமாக விநியோகம் செய்ய உள்ளது. இன்று( ஜனவரி 6, 2025) முதல் கோயம்பேடு, பிராட்வே பேருந்து நிலையங்களில் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.