ஸ்ரீமதி தற்கொலை வழக்கு- கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியம்பூர் பகுதியில் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி தற்கொலை வழக்கு தற்பொழுது வரை மர்மமாகவே உள்ளது. தனது மகள் தற்கொலை செய்யவில்லை கொலை என்று அவரது பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.அதனையடுத்து நான்கு நாட்களாக பெற்றோர்கள் போராட்டம் நடத்தியதையடுத்து ஞாயிற்றுக்கிழமை பெரும் கலவரமாக வெடித்தது. பள்ளி முழுதும் போராட்டக்காரர்கள் சூழ்ந்தன. பள்ளியை அடித்து உடைத்தனர்.
அங்குள்ள பேருந்துகள் அனைத்தும் தீ வைக்கப்பட்டது. அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இரு முறை ஸ்ரீமதியுடன் குறைந்த பரிசோதனை உட்படுத்தப்பட்டும் உடலில் கீறல்கள் உள்ளது என்பதை தவிர வேறு எந்தவித தகவலையும் வெளியிடவில்லை. தற்பொழுது பள்ளி நிர்வாகத்தை விசாரணை செய்யும் படி சிபிசிஐடி நீதிமன்றத்திடம் மனு கொடுத்துள்ளது. இதனை அடைத்து இந்த கலவரத்தில் சில கலவரக்காரர்கள் காசு கொடுத்து வைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு காசு கொடுத்து செட் செய்யும் பட்ட கலவரக்காரர்களுக்கு மது மற்றும் கறி விருந்து கொடுத்துள்ளனர். பின்னணியில் யார் உள்ளார்கள் என்பதை தற்போது புலனாய்வுத்துறை விசாரணை செய்து வருகிறது. போராட்டக்காரர்கள் பள்ளியை இது உடைத்ததில் மாணவர்களின் டிசி உள்ளிட்டவையும் தீயிடப்பட்டுள்ளது. மேலும் இந்த விசாரணை முடியும் வரை பள்ளிகளும் திறக்க முடியாத சூழல் உள்ளது.
கருத்தில் கொண்டு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை அருகில் இருக்கும் அரசு பள்ளிகளிலோ அல்லது தனியார் பள்ளிகளிலும் சேர்ந்து படிக்கலாம் என்று தெரிவித்தார். இதனையடுத்து சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகம் தங்களது மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பதாக தெரிவித்தது. அந்த வகையில் இன்று முதல் கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியம்பூர் பகுதியில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும்.