மிளகாய் மூட்டையில் கஞ்சா கடத்தல்!! தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது!!

0
109
Smuggling cannabis in a bag of chilli!! 3 people from Tamil Nadu arrested!!

சென்னை: ஒடிசா மாநில எல்லையில் இருந்து ஆந்திரா வழியாக, சென்னைக்கு கன்டெய்னர் லாரியில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக, மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, சென்னை மண்டல இயக்குனர் அரவிந்தனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது தலைமையில், போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், செங்குன்றம் அடுத்த நல்லுார் சுங்கச் சாவடியில், நேற்று முன்தினம் மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியில் வந்த ஆந்திராவில் இருந்து மினி லாரியில் மிளகாய் மூட்டைகளை கொண்டுவந்தது. அந்த லாரியை சோதனை செய்தபோது மிளகாய் மூட்டை நடுவில் உயர் ராக கஞ்சா பாக்கெட்டுக்கள் இருந்தனர். மேலும் அதில் 396 பாக்கெட்களில் சுமார் 858 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டனர். அதன் மதிப்பு சுமார் 4.25  கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. கன்டெய்னர் லாரியில் வந்த, திருச்சியை சேர்ந்த சிவஞானம், திருவண்ணாமலை பார்த்தசாரதி, திண்டுக்கல் தினேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள் போதை கும்பலிடம் இருந்து, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள, டோல்கேட் அருகே கஞ்சா பாக்கெட்டுகளை வாங்கி வந்துள்ளனர். இவர்கள் பின்னணி குறித்து, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த கஞ்சா கடத்தப்படுவது அதிகமாகி உள்ளது இதனை சிறப்பான முறையில் காவல் துறை தடுத்தாலும் தமிழகம் முழுவதும் கிடைத்து வருகிறது.