Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜம்மு-காஷ்மீரில் பனிப்பொழிவு.. சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

பனிப் பிரதேசமான ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் பனிப்பொழிவு முன்பைவிட அதிகரித்து வருகிறது. இந்த காலநிலை மாற்றம் காரணமாக சுற்றுலா சென்று வரும் பயணிகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குல்மார்க் பகுதியில், பனிப் பொழிவில் நனைந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர். பனிப் பொழிவு மற்றும் மழை காரணமாக மலைகளின் அரசியான மூசோரியில் எங்கும் பனி சூழ்ந்தது.

இதனிடையே ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் பணி சூழ்ந்ததால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ரஜோரி, பூஞ்ச், சோபியான், சோனாமார்க் சாலைகளும் மூடப்பட்டு விட்டன.

இதனால். அப்பகுதி நாட்டின் இதர பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. சில இடங்களில் பலத்த மழையும் கொட்டி தீர்க்கிறது.

Exit mobile version