Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த வயதில் இத்தனை அழகா?. குட்டி நயன்தாரா என செல்ல பெயர் இவருக்கு இருக்கா?..

இந்த வயதில் இத்தனை அழகா?. குட்டி நயன்தாரா என செல்ல பெயர் இவருக்கு இருக்கா?..

அனிகா தென்னிந்தியா திரைப்பட நடிகை ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானவர்.இவர் தனது திரையுலக பயணத்தை 2010 ஆம் ஆண்டு வெளிவந்த கத திடருன்னு எனும் மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் என்னை அறிந்தால்.இப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த பிரபலமானவர் நடிகை அனிகா.என்னை அறிந்தால் படத்திற்கு அடுத்து ஜெயம் ரவியுடன் மிருதன், குயின் வெப் சீரிஸ் என மீண்டும் அஜித்துக்கு மகளாக விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மாமனிதன் திரைப்படம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.குட்டி நயன்தாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அனிகா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை அதில் அப்டேட் செய்து வருகிறார்.அந்த வகையில் தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இதை அவருடைய ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து ரசித்து வருகின்றனர்.

Exit mobile version