Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வனிதாவுக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கும் ஆகவே மாட்டிக்குது!! வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!!

So get stuck for Vanitha and Ramya Krishnan !! Roasting fans !!

So get stuck for Vanitha and Ramya Krishnan !! Roasting fans !!

வனிதாவுக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கும் ஆகவே மாட்டிக்குது!! வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் உள்ள சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை கண்டுகளிக்க மக்கள் ஆர்வமாக இருப்பார்கள். மேலும் விஜய் டிவிகென ஒரு சிறப்பம்சம் உள்ளது. அது அவர்களின் தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பது தான். அந்த வகையில் பாடல் நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, சமையல் நிகழ்ச்சி போன்ற பல சுவாரசியமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளி பரப்புவதில் புகழ் பெற்றது.

இந்த நிலையில் கடந்த நான்கு வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்களை ஒன்றுசேர்த்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நடன நிகழ்ச்சி வாரந் தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும். மேலும் இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிறது. இந்த நிகழ்ச்சியின் ஜட்ஜஸ் ஆக நடிகர் நாகுல் மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர். மேலும் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் ஈரோடு மகேஷ் மற்றும் விஜய் டிவியில் அறிமுகமான சில நாட்களிலேயே பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படத்தில் நடித்து வரும் கலக்கப்போவது யாரு தீனா இருவரும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர்.

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான புரோமோ வெளியாகியுள்ளது. அதில்  நாடா காடா என்ற தலைப்பில் அனைவரும் நடனமாட உள்ளனர். அதில் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் பங்கேற்றுள்ளார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே செய்த செயல்களில் மக்கள் இவரை வெறுத்து விட்டனர்.மேலும்  இந்த வார நிகழ்ச்சியில் அவரின் நடனம் முடிந்து ஜட்ஜஸ் கருத்து கூறும் போது யாரையும் வைத்து என்னை ஒப்பிட வேண்டாம் என்று வனித்தா கூறி உள்ளார். இதனால் நடிகை ரம்யா கிருஷ்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் இந்த வாக்குவாதம் நீண்டு கொண்டே போன நிலையில் வனித்தா திடீரென மேடையை விட்டு கிளம்பிவிட்டார். இந்த ப்ரோமோக்கு ரசிகர்கள் இவங்க இங்க வந்தும் சும்மா இருக்க மாட்டறாங்களே, என்று கமென்ட் செய்து வனிதாவை வறுத்து எடுத்துக் கொண்டு உள்ளனர்.

Exit mobile version