ஆடி மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இவ்வளவு நன்மைகளா!!
பொதுவாகவே ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால் அது நம்மை ஆட்டிப்படைக்கும் என்று பெரியோர்கள் கூறுவார்கள். இதை ஆன்மீக ரீதியாக பார்த்தால் சூரிய பகவான் ஆடி மாதம் தான் கடகத்தில் தஞ்சம் கொண்டார்.அதாவது சூரியன் என்பவர் தகப்பனார் அந்தநேரத்தில் கடகத்தில் இருக்கும் பொழுது தகப்பனாருக்கு தேவையற்ற காரியங்கள் நடைபெறும் அதனால் காலம் காலமாகவே ஆடியில் குழந்தைகள் பிறப்பதை தவிர்த்து வருகின்றனர்.
அதனால் தான் புதிதாக திருமணம் செய்தவர்களை ஆடி மாதம் முழுவதும் ஒன்றுசேர விடுவதில்லை,ஆனால் இதெல்லாம் முன்னோர்கள் சொன்ன ஒரு சாக்குப்போக்கு மட்டும்தான் உண்மையான காரணம் என்னவென்றால் ஆடி மாதத்தில் கணவன் மனைவி ஒன்று சேர்ந்தால் அப்பெண் அந்த மாதத்தில் கருத்தரிக்கும் பொழுது அந்தக் குழந்தையை பங்குனி மாதத்தில் பெற்றெடுப்பாள்.பங்குனி மாதம் என்றாலே கோடைக் காலம் தான்.
அந்தக் கோடைக் காலத்தில் குழந்தைகள் உஷ்ணம் தாங்கமுடியாமல் அதிகளவு கஷ்டத்திற்கு உள்ளாவர்கள் இந்தக் காரணங்களுக்காகத்தான் ஆடி மாதத்தில் புதிதாக திருமணமானவர்களை ஒன்று சேர விட மாட்டார்கள்.இது தான் உண்மையான காரணமாகும்.இந்தக் காரணங்களால் மட்டுமே தான் ஆடி மாதத்தில் கணவன் மனைவி ஒன்று சேர கூடாது என மூதாதையர்கள் கூறினார்கள்.
ஆடி மாதத்தில் பிறந்த குழந்தைகளின் சிறப்புகள் என்னவென்றால் அக்குழந்தைகள் ரொம்ப அறிவாளியாகவும் இருப்பார்கள்.ஒரு விஷயத்தை செய்வதற்கு முன்பு தானாகவே முடிவு எடுக்க மாட்டார்கள் தனது குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டு அதன் பிறகுத் தான் முடிவு செய்வார்கள். படிப்பிலும் ,அறிவிலும் சிறந்தவர்களாகவும் இருப்பார்கள். ஒரு முடிவை எடுத்தால் அது மிக சிறப்பாக தான் இருக்கும், ஆனால் ஆடி மாதத்தில் பிறந்த குழந்தைகளின் உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கும் அம்மை போன்ற நோய்களும் அதிகம் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.