Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெள்ளைப் பூண்டில் இத்தனை நன்மையா? தினமும் இரண்டு பல்லு சாப்பிட்டாலே போதும்!

வெள்ளைப் பூண்டில் இத்தனை நன்மையா? தினமும் இரண்டு பல்லு சாப்பிட்டாலே போதும்!

தினந்தோறும் வெள்ளைப் பூண்டு எடுத்துக் கொள்வதால் இதய அடைப்பு பிரச்சனை ஏற்படாது. நமது உடலில் உள்ள அதீத கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. வெள்ளைப் பூண்டில் உள்ள ஒரு வித வேதிப்பொருள் கொழுப்பு கட்டிகள் வராமல் தடுக்க உதவுகிறது. தினதூரம் வெள்ளை பூண்டு எடுத்துக் கொள்வதால் சர்க்கரை நோயிலிருந்து விடுபடலாம். இதில் அதிக அளவு ஆன்டிபாக்டீரியல் உள்ளது. காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொண்டால் அதிக அளவு நன்மை உண்டாகும்.

ஐந்து அல்லது ஆறு பல்லு வெள்ளை பூண்டு களை எடுத்து தோல் நீக்கி ஒரு கடாயில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதால் வயிறு உப்பசம், காய்ச்சல், பித்தம் போன்றவை குணமாகும். உயர் ரத்த அழுத்தத்திற்கு வெள்ள பூண்டு நல்ல மருந்து என கூறுவர். மூட்டு வலி ,வாதம் போன்றவை குறைக்க வெள்ளைப்பூண்டு உதவும்.

கடுகு எண்ணெய் எடுத்துக்கொண்டு அதில் பூண்டு, இஞ்சி, கிராம்பு போட்டு நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை தடவி வர மூட்டின் மேல் உள்ள வீக்கம் குணமடையும். இந்த எண்ணையை தினந்தோறும் இரவு தூங்குவதற்கு முன் தடவி வரலாம்.

Exit mobile version