Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூன்று நாளில் இவ்வளவு கோடி வசூலா? அதிரடி வசூல் வேட்டையில் இறங்கியுள்ள பதான்! 

மூன்று நாளில் இவ்வளவு கோடி வசூலா? அதிரடி வசூல் வேட்டையில் இறங்கியுள்ள பதான்! 

இந்தி நடிகர் ஷாருக்கானின் நடிப்பில் வெளிவந்த பதான் திரைப்படம் உலகமெங்கும் வசூலை அள்ளி குவித்து வருகிறது.

கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியான பதான் திரைப்படம் பல்வேறு தடைகளை மீறி வெளிவந்து வசூலை குவித்து வருகிறது. நான்காண்டுகள் கழித்து வெளியான ஷாருக்கான் படம் என்பதால் இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து வந்தன. யாஸ்ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிக்க சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் அதிரடி, ஆக்சன், திரில்லர், கலந்த கலவையாக உருவாகியுள்ளது பதான்.

ஷாருக்கான் தீபிகா படுகோனின் கெமிஸ்ட்ரி, ஜான் ஆபிரகாமின் அதிரடி நடிப்பு,சல்மான் கானின் தோற்றம், என காட்சிக்கு காட்சி விறுவிறுப்புடன் கதைக்களம் நகர்கிறது.  இந்தியாவில் உள்ள பெரு நகரங்களில் 5000 தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. அதேபோல் உலகமெங்கும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 2500 தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. படத்தின் வெற்றியால் புதிய சாதனையாக 300 தியேட்டர்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டு 8500 தியேட்டர்களில் படம் வெளியிடப்பட்டது. இந்தி திரை உலகில் 57 கோடியை வசூல் செய்து  முதல் நாளில் அதிக வசூல் செய்த இந்தி படம் என்ற சாதனை புரிந்துள்ளது. இந்தி திரை உலகில் திரையிடப்பட்ட படங்களில் தொடக்க நாளில் அதிக வசூல் சாதனை செய்த இந்தி படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. விடுமுறை அல்லாத நாளில் வெளியிடப்பட்டு அதிக வசூலை அள்ளிய படம் என்ற சாதனையை பதான் படம் படைத்துள்ளது.  மேலும் இந்தியாவில் அதிக திரையரங்குகளில் வெளியிடப்பட்ட படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.

இந்த படம் இந்தியாவில் மட்டும் மூன்று நாட்களில் 150 கோடி வசூலை செய்துள்ளது. உலகமெங்கும் 300 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளது. முதல் நாளில் 57 கோடியும் 2-வது நாளில் 70.50 கோடியும், 3- வது நாளில் 36 கோடியும் வசூல் சாதனை செய்துள்ளது. இவ்வாறு மொத்த பாக்ஸ் ஆபீஸ் வசூலாக 150 கோடி வசூலை அள்ளியுள்ளது. இந்திய பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றில் 150 கோடி வசூலை பெற்றுள்ளது இதன் கொண்டாட்டங்களுக்கான காரணமாகும்.

இதை வர்த்தக நிபுணரான ரமேஷ் பாலா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உலகமெங்கும் 300 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்திய பதான் படம் 21 சாதனைகளை படைத்துள்ளது.

 

Exit mobile version