இத்தனை கோடி நகைக்கடனும் மோசடி! அரசு செய்த அதிரடி! 3 பேர் பணி நீக்கம்!
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் நகைக்கடன் தள்ளுபடி என மு.க. ஸ்டாலின் அவர்கள் சொன்னார். அதே போல் அவர் ஆட்சிக்கு வந்தவுடன் அவர் மக்களுக்கு கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். அதன் படி தற்போது கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற்ற நபர்களுக்கு 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் அதேபோல கூட்டுறவு வங்கிகளில் நகை தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவித்தார். அதனை அடுத்து பல மாவட்டங்களிலும் உள்ள பதிவுகளை அதிகாரிகள் சரி பார்க்கத் தொடங்கினார்கள். அப்போது மிகப்பெரிய ஊழல்கள் அதன் மூலம் நடந்திருந்தது தெரியவந்தது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரும் கூட்டுறவு வங்கிகளின் மூலம் நகைக் கடன் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டு இருந்ததும் தெரியவந்தது. அவ்வாறு விதிகளை மீறி பெறப்பட்ட நகை கடன் தொகைகளை வசூலிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இது தொடர்பாக அனைத்து மண்டல பதிவர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதில் ஐந்து சவரனுக்கு அதிகமாக மற்றும் விதிகளை மீறி நகை கடன் பெற்றவர்களின் ஆதாரங்களை சேகரிக்க வேண்டும் என்றும், முறைகேடுகளில் ஈடுபட்டவர்களிடமிருந்து நகைக்கடனை வசூலிக்கவும், தவணை தொகையை கட்ட தவறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டிருந்தார்.
தற்போது பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதே போல் ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டதில் 77 போலி நகைகள் மற்றும் தரம் குறைவான சீல் வைக்கப்பட்ட நகை பொட்டலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில நபர்களுக்கு எடை குறைவாக உள்ள நகைகளுக்கு அதிக பணம் நகைக்கடனாக கொடுத்ததும் தெரியவந்து உள்ளது. மேலும் அதனை தொடர்ந்து பல முறைகேடுகளில் ஈடுபட்டு வந்ததும் அதன் மூலம் தெரியவந்துள்ளது. இதேபோல் மொத்தம் 2 கோடியே 39 இலட்சம் வரை மோசடி செய்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக இந்த நகைக்கடன் வழங்க உறுதுணையாக இருந்த வங்கி பணியாளர்கள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் மீது தக்க நடவடிக்கை விசாரணைகளை மேற்கொள்ள திருவண்ணாமலையில் இணைப்பதிவாளர், கூட்டுறவு சங்க பதிவாளர் ஆகியோருக்கு ஒரு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் வங்கி பணியாளர்கள் 3 பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முறைகேட்டில் ஈடுபட்ட பணியாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என்றும் கூறியிருந்தார். அதேபோல முறைகேடு தொடர்பாக செய்யாறு துணைப்பதிவாளர் இடமும் விசாரணை மேற்கொள்ள ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.