Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆறு மாதங்களில் இவ்வளவு தற்கொலையா ? அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு !!

இந்தியாவில் கேரள மாநிலத்தில், கடந்த 6 மாதங்களில் மட்டும் 140 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 140 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டதாக ஆய்வுமுடிவுகள் ஒன்று வெளியாகியுள்ளது. தற்கொலை செய்து கொண்டவர்கள் பெரும்பாலானவர்கள் 13 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்கள் என கூறப்படுகிறது. இந்த ஆய்வினை திஷா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மேற்கொண்டு, புள்ளி விவரங்களை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தற்கொலைக்கான காரணங்களாக காதல் தோல்வி பிரச்சனை, குடும்பத்தில் தகராறு, தேர்வு தோல்வி மற்றும் மொபைல் போன் பிரச்சினைகள் போன்றவற்றை காரணமாக சொல்லப்படுகிறது. மேலும் , இதனை கேரள மாநில மனித உரிமை ஆணையம் கருத்தில் கொண்டு ஆய்வு மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளது

Exit mobile version