Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கருப்பு பூஞ்சை தொற்றின் காரணமாக எத்தனை பாதிப்பு! அதிர்ச்சி தகவல்!

So much damage due to black fungal infection! Shocking information!

So much damage due to black fungal infection! Shocking information!

கருப்பு பூஞ்சை தொற்றின் காரணமாக எத்தனை பாதிப்பு! அதிர்ச்சி தகவல்!

நாடு முழுவதிலும் கொரோனா நோய் தொற்றை தொடர்ந்து நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளோரை புது தொற்றான கரும் பூஞ்சை நோய் தாக்குகின்றது.

மேலும் இதற்கான சிகிச்சைகள் மற்றும் உபயோகிக்கும் மருந்துகள் குறித்து பல்வேறு தரப்பிலும் வாதங்கள் விவாதிக்கப்பட்டு வருகிறது.மத்திய அரசு மாநில அரசுகளுக்கு மருந்துகளை பரிந்துரை செய்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மோடிக்கு இந்த கரும் பூஞ்சை நோய்க்கு இலவசமாக சிகிச்சை பார்க்க வேண்டும் என்று  வலியுறுத்தி உள்ளார்.

மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்புப் பூஞ்சை மிகவும் அபாயகரமான, அரியவகை பூஞ்சை.நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்களுக்கு அதிக அளவாக கருப்புப் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

 அவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் நாடு முழுவதிலும் இந்த நோய்க்கு 8,848 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் அதிக பட்ச பாதிப்புகள் குஜராத்தில் ஏற்பட்டு உள்ளது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக குஜராத்தில் 2,281 பேரும், மராட்டியம் 2,000 பேரும், ஆந்திரம் 910 பேரும், மத்தியப்பிரதேசம் 720 பேரும், ராஜஸ்தான் 700 பேரும், கர்நாடகம் 500 பேரும், தெலங்கானா 350பேரும், ஹரியானா 250பேரும், தமிழகத்தில் 48 பேரும் உள்பட 24 மாநிலங்களில் மொத்தமாக கருப்புப் பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version