ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த சிவப்பு அரிசி நம் பாரம்பரிய அரிசி வகையாகும்.சிவப்பு அரிசியானது சர்க்கரை நோய்,கொலஸ்ட்ரால்,செரிமானப் பிரச்சனை,உடல் பருமன்,உயர் இரத்த அழுத்தம்,இரத்த கொதிப்பு,இரத்த சோகை போன்ற பல நோய்களுக்கு மருந்தாக செயல்படுகிறது.
சிவப்பு அரிசி சத்துக்கள்:
மெக்னீசியம்,கால்சியம்,இரும்பு,பாஸ்பரஸ்,செலினியம்,வைட்டமின் பி உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.இந்த சிவப்பு அரிசி வைத்து மூலிகை கஞ்சி செய்வது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
1)சிவப்பரிசி – 1/4 கப்
2)தேங்காய் பால் – 1/4 கப்
3)சுக்கு – ஒரு துண்டு
4)சீரகம் – 1/4 தேக்கரண்டி
5)உப்பு – தேவையான அளவு
6)பூண்டு – இரண்டு பல்
7)வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
ஒரு பாத்திரத்தில் 1/4 கப் சிவப்பரிசி போட்டு அரிசி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஊறவிடவும்.
பிறகு அடுப்பில் வாணலி வைத்து 1/4 தேக்கரண்டி வெந்தயம்,1/4 தேக்கரண்டி சீரகம் மற்றும் ஒரு
துண்டு தோல் தோல் நீக்கிய சுக்கு சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.
அடுத்து இரண்டு பல் பூண்டை தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் குக்கரை வைத்து ஊறவைத்த சிவப்பரிசி சேர்க்கவும்.
அதன் பிறகு வறுத்த வெந்தயம்,சீரகம் மற்றும் சுக்கை உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.இதை சிவப்பு அரிசியில் சேர்த்துக் கொள்ளவும்.பிறகு அதில் தோல் நீக்கிய பூண்டு,தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு தேங்காயை துருவி மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.பிறகு தேங்காய் பாலை ஒரு கிண்ணத்திற்கு ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.இந்த தேங்காய் பாலை சிவப்பு அரிசியில் ஊற்றி மூடி போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.மூன்று விசில் வரும் வரை கொதிக்க வைத்து பிறகு அடுப்பை அணைத்து விடவும்.
பிறகு விசில் நின்றதும் தயாரான சிவப்பு அரிசி கஞ்சியை ஒரு கிண்ணத்தில் ஊற்றி குடிக்கவும்.இந்த கஞ்சி இரத்த சோகை,சர்க்கரை நோய் போன்றவற்றை குணமாக்க உதவுகிறது.