கூட்டணியில் கொடுத்த 2 எம்பி சீட்டுக்காக இப்படியுமா? திருமாவளவனை வச்சு செய்யும் சமூக ஆர்வலர்கள்

0
127
Social activist criticise VCK Thirumavalavan-News4 Tamil Online Tamil News1

கொரோனவால் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ள மக்களுக்கு உதவ திமுகவினரால் ஆரம்பிக்கப்பட்ட ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களை தி.மு.க. எம்பிக்கள் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் தலைமை செயலாளரை சந்தித்து வழங்கினர். இவ்வாறு இந்த மனுக்களை தலைமை செயலாளரிடம் கொடுத்துவிட்டு வெளியே வந்த திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் இந்த சந்திப்பின் போது தலைமைச் செயலாளர் சண்முகம் நடந்து கொண்ட விதம் குறித்து அவர் மீது பல்வேறு குற்றசாட்டுக்களை வைத்தனர்.

மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், தலைமை செயலாளர் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டு கோரிக்கை மனு அளிக்க வந்தவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று குற்றம்சாற்றியுள்ளார்.மேலும் “எங்களை மூன்றாம் தர மக்கள் போல் நடத்தினர். நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட ஆட்களா?”, என்றும் அவர் உணர்ச்சிவசமாக விமர்சித்துள்ளார்.

சமூக நீதி மற்றும் பெரியார் கொள்கைகளை கடைபிடிப்பதாக திமுகவினர் பேசி வரும் இந்த நிலையில் தயாநிதி மாறனின் இந்த சாதி அடிப்படையிலான பேச்சு, உயர்ந்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்ற ஜாதி வெறி,சாதிய பாகுபாடுகளை அவர்கள் இன்னும் மறக்கவில்லை என்பதையே உணர்த்துகிறது. மேலும் சம்பந்தமேயில்லாமல் தாழ்த்தப்பட்ட மக்களை தொடர்புபடுத்தி தயாநிதிமாறன் பேசிய இந்த பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து திமுகவின் கூட்டணி கட்சி தலைவரும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அரசியல் செய்பவருமான திருமாவளவன் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, “தலைமைச்செயலாளர் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது சரி. ஆனால்,அந்தவேகத்தில் ‘நாங்கள் தாழ்த்தப் பட்டவர்களா’என்றது அதிர்ச்சியளிக்கிறது. அதில் உள்நோக்கமில்லை; என்றாலும் இம்மண்ணின் மைந்தர்களின் உள்ளத்தைப் பாதித்திருக்கிறது.இது தோழமை சுட்டுதல். என்றும் அவர் அதில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் கூட்டணிக்காகவும் 2 எம்பி சீட்டுக்காகவும் இப்படியெல்லாம் முட்டு கொடுக்கலாமா என விசிக தலைவர் திருமாவளவன் அவர்களை சமூக ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இது குறித்து பத்திரிக்கையாளர் மதன் ரவிச்சந்திரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

தயாநிதி மாறன் MP : என்ன கொஞ்சம் மரியாதையா நடத்துங்க இப்படி அசிங்கபடுத்த நான் ஒன்றும் தாழ்த்தபட்டவன் இல்லைங்கயா .. “இதுவே வேற கட்சிக்காரன் எவனாவது சொல்லிருக்கனும்?! இந்நேரம் உக்கிரமாகிருப்போம்” இப்படிக்கு – சமூகநீதி உபிஸ்

பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் திரௌபதி பட இயக்குனர் மோகன் ஜி பதிவிட்டுள்ளது:

வேறு யாராவது மறைமுகமாக சொல்லி இருந்தா கூட உக்கிரமா தான் ஆகி இருப்பாங்க.. ஆனா இவங்க சொல்லலாம்.. எவிடன்ஸ் கதிர், திருமுருகன் காந்தி, சுபவீ இவங்க கூட mute mode க்கு போய்டுவாங்க.. ஏன்னா உருட்டு அப்படி..

https://twitter.com/AMRarmy_/status/1261138939567411200