நீதிபதிகளின் நியமனத்தில் பின் தங்கிய சமூகங்களுக்கு சமூக நீதி வழங்கப்பட வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கின்ற வலைதள பதிவில் தெரிவித்திருப்பதாவது சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்ற ஜூலை மாதம் 23ஆம் தேதி நிலவரத்தினடிப்படையில் 5 .63 லட்சம் வழக்குகள் நிலவையிலிருப்பதாகவும் அதிக வழக்குகள் நிலுவையிலிருக்கின்ற நீதிமன்றங்களில் சென்னை உயர்நீதிமன்றம் 4வது இடத்தில் உள்ளதாகவும், மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளி விவரம் கவலையளிக்கும் விதமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் நிலுவையிலிருக்கின்ற மொத்த வழக்குகளில் 10% வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் இருக்கின்றன என்பதிலிருந்து அங்கே எவ்வளவு வழக்குகள் தேக்க நிலையில் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள முடியும். உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக இருப்பது தான் இதற்கு முக்கிய காரணமாகும் எனக் கூறியிருக்கிறார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் காலியிடங்களை நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் வன்னியர் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லை என்றும் அறிகிறேன். நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர் உள்ளிட்ட அனைத்து பின்தங்கிய சமூகங்களுக்கும் சமூக நீதி வழங்கப்பட வேண்டும்!(4/4)#SocialJustice
— Dr S RAMADOSS (@drramadoss) August 8, 2022
மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் 75 நீதிபதிகள் பணியிடங்களில் 19 பணியிடங்கள் காலியாகயிருக்கின்றன அடுத்த மாதத்தில் 2 நீதிபதிகள் மற்றும் டிசம்பர் மாதத்தில் மற்றொரு நீதிபதி என ஓய்வு பெறவிருக்கிறார்கள்.
இதன் காரணமாக, காலியிடங்கள் 22 ஆக அதிகரிக்கும் நிலையிலிருக்கிறது ஆகவே நிலுவையிலிருக்கின்ற வழக்குகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் காலியிடங்களை நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் வன்னியர் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் கிடையாது என்றும் நான் அறிந்தேன். நீதிபதிகள் நியமனம் செய்வதில் வன்னியர் போன்ற அனைத்து பின்தங்கிய சமூகங்களுக்கும் சமூக நீதி வழங்கப்பட வேண்டும் என்று அவர் பதிவிட்டிருக்கிறார்.