தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி அபார வெற்றியை பெற்றிருக்கிறது இதனை தொடர்ந்து விரைவில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைப்பதற்கான வழி முறைகள் என்னவென்று அந்த கட்சி ஆராய தொடங்கியிருக்கிறது.நேற்று மாலை பல தொகுதிகளில் திமுக முன்னிலையில் இருந்ததை அடுத்து நேற்று மாலை முதலே ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் வர தொடங்கிவிட்டது. திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதிமுக 75 தொகுதிகளில் வெற்றி அடைந்திருக்கிறது.
ஆகவே இந்த தேர்தலில் முடிவுகள் படி சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் திமுக வெற்றியடைந்தது. கொங்குமண்டலம், சேலம், தர்மபுரி, உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில், சமூக வலைதளப் பக்கத்தில் சென்னையைச் சார்ந்த நபர்கள் ஒரு சிலர் கோவை மாவட்ட மக்கள் முட்டாளா அங்கு அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வந்திருக்கிறது என்ற பிரச்சினையை தொடங்க, எதிர்த்தரப்பின் கோவையை சார்ந்த அவர்கள் சென்னை மக்கள் முட்டாளா நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் நிதிகளின் வாரிசுகளுக்கா என பதிலளிக்க ட்விட்டர் பக்கத்தில் சென்னை vs கோவை என்று ஐபிஎல் போட்டி தொடர் போல சண்டையிட்டு வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
சென்னை சுற்றுவட்டார பகுதியில் நோய் தொற்று வைரஸ் பரவல் அதிகமாக இருக்கும் சமயத்தில் கோயமுத்தூர் மாவட்டம் வரும் நாட்களில் சென்னையை போல கடுமையாக பாதிப்படையலாம் என்று கணிக்கப்பட்டு அரசு அதிகாரிகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.சமீபத்தில் திமுகவின் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் குமார் ஒரு நகைப்பிற்குரிய ட்வீட்டுக்கு பதிலளிக்க அது மிகப்பெரிய பேசு பொருளாக மாறி தேசிய அளவில் டிரெண்ட் ஆகியது. தற்போது சென்னைvs கோவை என்று டிரென்ட் ஆகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.