சமூக பரவலாக மாறிய ஒமைக்ரான்! சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

0
119

சென்னை ஈஞ்சம்பாக்கம் நோய்த்தொற்று சிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 32மாணவர்களையும் மருத்துவம் மற்றும் சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் சந்தித்து நலம் விசாரித்தார்.

சென்னை சைதாப்பேட்டையில் இருக்கின்ற அரசு மாதிரி பள்ளியில் மாணவர் ஒருவருக்கு நோய் தோற்ற உறுதி செய்யப்பட்டது, இதனை அடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த 34 மாணவர்களில் ஒரு மாணவி மட்டும் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையிலும், மற்றொரு மாணவி தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மீதம் இருக்கின்ற 32 மாணவர்களும் ஈஞ்சப்பாக்கத்தில் பக்கத்தில் இருக்கின்ற நோய் தொற்று சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த மாணவர்கள் சிகிச்சை மையத்திலேயே நேரத்தை வீணடிக்காமல் படித்துக் கொண்டிருக்கிறார்கள், புதிய வகை தொற்று மற்றும் டெல்டா வைரஸ் உள்ளிட்டவை சுனாமி வேகத்தில் பரவிக் கொண்டிருக்கின்றன. என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது தமிழ்நாட்டில் ஏற்கனவே 46 பேருக்கு நோய் தொற்று நோய் பரவல் உறுதிசெய்யப்பட்ட சூழ்நிலையில், நேற்றைய தினம் மேலும் 74 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

வெளிநாட்டில் இருந்து வருகைதந்தவர்களுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாத 63 பேருக்கு இந்த புதிய வகை நோய் தொற்று பாதிப்பு உண்டாகி இருப்பது சமூக பரவரலின் அடையாளமாக காணப்படுகின்றது. இதுவரையில் 120 பேருக்கு புதிய வகை நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.