Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெள்ளத்தில் சிக்கிய உள்துறை அமைச்சர்!! ஹெலிகாப்டர் மூலம் மீட்ட ராணுவ வீரர்கள்!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கிய மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவை ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்டுள்ளனர்.

தற்போது வட மாநிலங்களில் பரவலாக பருவமழை தொடங்கியுள்ளதால் மத்திய பிரதேசம் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. அதனால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் டாட்டியா மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை பார்வையிடுவதற்காக அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா சென்றிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மீட்புப் குழுவினர் படகின் மீது மரம் விழுந்ததில் என்ஜின் பழுதாகியுள்ளது. இதனால் அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார்.

இதனை அடுத்து ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரில் இருந்து உடனடியாக வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவை மீட்டனர். மேலும், வெள்ளத்தில் சிக்கிய மீட்புக் குழுவினரையும் மீட்டெடுத்தனர். தற்போது வெள்ளத்தில் சிக்கிய அமைச்சரை மீட்பு படையினர் மீட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version