சோமேட்டோ ஆப் முதன் முதலில் உணவு டெலிவரி செய்யும் வேலைக்கான தளமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து மளிகை சாமான்கள் கொண்டு செல்லும் தளமாகவும் அப்டேட் செய்யப்பட்டது.
தற்பொழுது டிஸ்ட்ரிக் என்ற புதிய அப்ளிகேஷன் சோமேட்டோவால் அடுத்த 4 வாரங்களுக்குள் வெளிவர இருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்த புதிய அப்ளிகேஷன் மூலம், உணவகங்கள், திரைப்பட டிக்கெட் புக்கிங், விளையாட்டு போட்டிகளுக்கான டிக்கெட் புக்கிங், நேரலை நிகழ்வுகள், ஷாப்பிங் மற்றும் தங்குமிடங்களுக்கான புக்கிங் போன்ற பல சேவைகளை ஒரே இடத்தில் பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒவ்வொரு சேவைகளுக்கும் ஒவ்வொரு ஆப் என்ற பயன்பாட்டை தவிர்க்க முடியும் என்று கூறப்படுகிறது. மூவிஸ் பார்ப்பதற்காக டிக்கெட் புக்கிங் செய்வதற்கு என தனி ஆப் ஃபுட் டெலிவரிக்கு தனி ஆப் போன்று நம்முடைய அன்றாட தேவைக்கு தனித்தனியாக பல ஆப்புகளை ஸ்டோர் செய்து வைப்பதற்கு பதிலாக, இந்தா ஒன்றினை வைத்தால் மட்டுமே போதும் என்பதற்காக இந்த புதிய அப்ளிகேஷன் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகத் தளங்கள் வழியாக டிஸ்ட்ரிக்ட் அப்ளிகேஷனின் அறிமுகத்தை வெளியிட்ட தீபிந்தர் கோயல் உணவு விநியோகம் மட்டுமின்றி பிற சேவைகளை வழங்குவதிலும் நிறுவனம் கவனம் செலுத்துவதாக கூறினார்.
சொமேட்டோவின் Q2 காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகள்: 2025 நிதியாண்டின் 2-வது காலாண்டில் சொமேட்டோ நிறுவனம் அதன் செயல்பாடுகளின் மூலம் ரூ.4,799 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது 2024-ஆம் நிதியாண்டின் 2-வது காலாண்டில் ரூ.2,848 கோடியாக இருந்தது. மேலும் இந்த காலாண்டில் நிறுவனத்தின் மொத்த செலவுகள் ரூ.4783 கோடி. இது ஒரு வருடத்திற்கு முன்பு, அதாவது கடந்த நிதியாண்டின் 2-வது காலாண்டில் ரூ.3,039 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.