Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மைசூர் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தமிழகத்தை சேர்ந்த சிலர் கைது! 

Some arrested from Tamil Nadu in Mysore student sexual harassment case

Some arrested from Tamil Nadu in Mysore student sexual harassment case

மைசூர் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தமிழகத்தை சேர்ந்த சிலர் கைது!

கர்நாடக மாநிலத்தில், மைசூர் சாமுண்டி மலை அடிவாரத்தில் லலிதாதிரிபுரா பகுதியில் கடந்த 24ஆம் தேதி காதலனுடன் சென்ற ஒரு கல்லூரி மாணவியை 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார். மேலும் அவருடைய காதலனையும் அதில் பயங்கரமாகத் தாக்கப்பட்டு இருந்தார். இந்த செய்தி கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் டிஜிபி பிரதாப் ரெட்டி தலைமையிலான போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அங்கு குடித்த சில நபர்களே இந்த சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே போலீசாரே வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில்  போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் நடந்த தினத்தில் கல்லூரி மாணவியுடன் சென்ற அவருடைய காதலனை பயங்கரமாக தாக்கியுள்ளனர். அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவரிடம் சென்று போலீசார் வாக்குமூலம் வாங்கினார்கள்.

அந்த வாக்கு மூலத்தின் மூலம் அவர் இவ்வாறு கூறினார். கடந்த 24ஆம் தேதி நானும் எனது காதலியும் சாமுண்டி மலை அடிவாரத்துக்கு சென்றோம். அங்கு உள்ள ஒரு மீது அமர்ந்து நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் எங்களை சுற்றி வளைத்து கிண்டல் செய்தனர். இதனை தட்டிக் கேட்ட போது என்னை கல்லால் தலையில் தாக்கினார்கள். அதனால் நான் சுயநினைவை இழந்து விட்டேன்.

அதன்பிறகு மயக்கமும் அடைந்தேன். நினைவு திரும்பி பார்த்தபோது காதலி அங்கு இல்லை. நான்கு பேர் மட்டும் என்னை சுற்றி நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் என் காதலி எங்கே என்று கேட்டேன். அப்போது அவர்கள் உனது வீட்டுக்கு போன் செய்து நான்கு லட்சம் பணம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.

அவர்களிடம் என் காதலியை முதலில் காட்டுங்கள் என்று கூறியதை அடுத்து அவர்கள் காதலியை என் முன் கொண்டு வந்தனர். அவருடைய உடல் முழுவதும் நகக்கீறல்கள் இருந்தன. மேலும் அவர் அழுது கொண்டிருந்தார். அப்போது அவருடைய நிலைமை பார்க்கும் போதே நான் அந்த நிலைமையை புரிந்துகொண்டேன். அந்த சமயத்தில் யாரோ அங்கு வந்ததன் காரணமாக அவர்கள் எங்களை விட்டு தப்பி ஓடி விட்டனர்.

அதன் பின் அந்த வழியாக வந்த பொதுமக்களின் உதவியுடன் நாங்கள் இருவரும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தோம் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தற்போது தமிழகத்தைச் சேர்ந்த 5 பேரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 5 பேர்  கர்நாடகாவில் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வந்துள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களில் ஒருவன் 17 வயது நிரம்பியவர் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவன் மாயமாகி உள்ளதால் அவனைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version