Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிறந்த குழந்தைகள் குறித்து சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்!!

குழந்தைகள் என்றாலே அழகுதான்.அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் ஏன் அழுகை கூட ரசிக்க வல்லதாக இருக்கும்.இதனுடன் கூட குழந்தைகள் பற்றி இன்னும் சில விஷயங்கள் தெரிந்து கொள்ளுங்கள் இன்னும் சுவாரசியமாக இருக்கும்.

பிறந்த குழந்தைக்கு மூன்று மாதம் வரை கண்ணீர் சுரப்பி வளர்ச்சி பெற்றிருக்காது.இதனாலேயேமூன்று மாதங்கள் வரை குழந்தைகள் அழுதால் அதன் கண்ணில் இருந்து கண்ணீர் வராது.

பிறந்த குழந்தைக்கு கருப்பு வெள்ளை நிறங்கள் மட்டுமே தெரியும். வளர வளர பார்வை வளர்ச்சி பெற்று மற்ற நிறங்களில் கவரப்படுகின்றனர்.

பிறந்த குழந்தைகளுக்கு தன் தாயின் வாசனை மற்றும் ஸ்பரிசம் முழுமையாக தெரியும் இதனாலேயே குழந்தைகள் அழுது கொண்டிருக்கும் பொழுது தாய் வந்தவுடன் அழுகையை நிறுத்திக் கொள்கின்றனர்.

பிறந்த குழந்தைகளுக்கு நிற வேறுபாடு தான் தெரியாதே தவிர உருவங்கள் தெளிவாக தெரியும் இதனாலேயே யாரு சென்றாலும் குழந்தைகள் சிரிக்கின்றன.

பிறக்கும் குழந்தைகளுக்கு 207 எலும்புகள் இருக்கும்.வளர வளர மண்டையோடு முதுகெலும்பில் உள்ள எலும்புகளுடன் இணைந்து 206 எலும்புகள் ஆகின்றன.

குழந்தைகளுக்கு தலையில் மண்டையோட்டு பகுதி மிகவும் மென்மையாக இருக்கும் நமது கைபட்டால் கூட அது உள்ளே போகும். இதனாலேயே குழந்தைகளின் தலையில் கை வைத்து அழுத்தக் கூடாது என்று கூறுவர்.

குழந்தைகள் பிறந்ததும் தலை மற்றும் சருமத்தில் மென்மையாக முடிகள் அதிகம் இருக்கும். சில வாரங்களில் அந்த முடி உதிர்ந்து விடும்.

பிறந்த குழந்தையால் சுமார் 20 அடி தூரத்தில் இருப்பதை மட்டுமே காண இயலும்.

Exit mobile version