Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொடர்மழைக்கும் மத்தியில் நிகழ்ந்த சில சுவாரசிய சம்பவங்கள்! மழை படுத்தும் பாடு!

தொடர்மழைக்கும் மத்தியில் நிகழ்ந்த சில சுவாரசிய சம்பவங்கள்! மழை படுத்தும் பாடு!

சென்னை குரோம்பேட்டையில் பிராட்வேக்கு சென்ற பேருந்துக்குள் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பைப்பிள் தண்ணீர் கொட்டுவது போன்று வழிந்த மழை நீரால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

சென்னை பிராட்வே பகுதியில் இருந்து மூலக்கடை நோக்கிச் சென்ற பேருந்து வியாசர் பாடி ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்டது. பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் பேருந்தில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுகவிற்கு எதிராக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொட்டுமழையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு இலவச கொடைகள் வழங்கப்பட்டன. குடைகளை வாங்க பெண்கள் முண்டியடித்துக் கொண்டு மற்றொரு போராட்டமே நடத்திவிட்டனர்.

சென்னையில் தொடர் மழையால் வாகன ஓட்டுகள் அவதிப்பட்டு வரும் நிலையில் போதை ஆசாமி ஒருவர் போட்ட ஆட்டம் காண்போரை நகைக்க செய்தது. பட்டாளத்தில் ஒருபுறம் வாகனம் செல்ல தேங்கியிருந்த மழை நீரில் ஏதோ ஆற்றில் ஆனந்த குளியல் போடுவது போல அவர் போட்ட குளியல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Exit mobile version