உடல் எடை மளமளவென குறைய இயற்கை வழியில் சில எளிய தீர்வு!!

0
74
#image_title

உடல் எடை மளமளவென குறைய இயற்கை வழியில் சில எளிய தீர்வு!!

நம் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். இல்லையெனில் கடுமையாக நோய் பாதிப்புகள் உடலுக்குள் எளிதில் சென்று நம் உயிருக்கு உலை வைத்து விடும்.

உடல் பருமன் ஏற்படக் காரணங்கள்:-

*துரித உணவு

*அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவு

*நிம்மதியற்ற தூக்கம்

*எண்ணெயில் பொரித்த உணவு

*மன அழுத்தம்

*உடலுக்கு தேவையான உடற்பயிற்சி இல்லாமை

*அதிக உணவு எடுத்துக் கொள்ளுதல்

உடல் எடையை ஆரோக்கியமாக குறையாக இந்த வழிகளை பின்பற்றுங்கள்…

*சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி ஈரமில்லாமல் சுத்தம் செய்து கொள்ளவும். இதை ஒரு கண்ணாடி ஜாரில் போட்டு தேவையான அளவு தேன் சேர்த்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை மளமளவென குறையும்.

*தினமும் வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி அளவு தேங்காய் குடித்து வருவதன் மூலம் உடல் எடை மளமளவென குறையும்.

*தேங்காய் எண்ணெயில் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் எடை விரைவில் குறையும்.

*காலையில் சூடு நீர் அருந்தி வருவதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும்.

*நீரில் தனியா விதை, சோம்பு, சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை சாறு கலந்து பருகினால் உடல் எடை விரைவில் குறையும்.

*காலையில் வெறும் வயிற்றில் 1 கிளாஸ் சூடான நீரில் 1 தேக்கரண்டி தேன் கலந்து பருகி வந்தோம் என்றால் உடல் எடை மளமளவென குறையும்.

*பன்னீர் ரோஜா இதழில் தேநீர் செய்து பருகி வருவதன் மூலம் உடல் எடை விரைவில் குறையும்.

*தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் யோகா அல்லது உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் உடல் பிட்டாக இருக்கும்.

*எண்ணையில் பொரித்த உணவுகளை தவிர்த்து நட்ஸ், பழ வகைகளை சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் இருக்கும்.