Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாதவிடாய் காலங்களில் பெண்கள் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள்!!! பெண்கள் கண்டிப்பாக தெரிஞ்சாக்கோங்க!!!

#image_title

மாதவிடாய் காலங்களில் பெண்கள் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள்!!! பெண்கள் கண்டிப்பாக தெரிஞ்சாக்கோங்க!!!

மாதவிடாய் காலங்களில் பெண்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம். பெண்கள் அனைவரும் மாதவிடாய் காலங்களில் இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஓய்வு என்பது அத்தியாவசியமான ஒன்று. ஆனால் தற்பொழுதைய காலத்தில் ஓய்வுக்கு நேரம் இல்லாமல் பரபரவென்று உழைத்துக் கண்டு இருக்கின்றனர். இதையடுத்து பெண்கள் மாதவிடாய் காலத்தில் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பெண்கள் மாதவிடாய் காலத்தில் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்…

* பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் கால்கள் இழுப்பது, அடிவயிற்றில் அதிக வலி ஏற்படும். அவ்வாறு இருந்தால் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கும் பால், தயிர், வெண்டைக்காய், கீரை, பாதாம் ஆகியவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும்.

* மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலியை குறைக்க தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். தண்ணீருக்கு பதிலாக ஜூஸ்களையும் குடிக்கலாம்.

* அதிகம் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் அதிகம் ரத்தப் போக்கு ஏற்படும்.

* வலியில்லாத மாதவிடாய்க்கு பெண்கள் வைட்டமின் சத்துக்கள் நிறைந்த நட்ஸ் வகைகள், மீன், வாழைப்பழம், தர்பூசணி, கீரை போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

* மாதவிடாய் காலங்களில் பெண்கள் டார்க் சாக்லேட்டுகளை அதிகம் சாப்பிடலாம். டார்க் சாக்லேட்டுகள் அதிகம் சாப்பிடுவதால் செரட்டோனின் அதிக அளவில் சுரக்கும். இது பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் டென்ஷன், பதற்றம் ஆகியவற்றை குறைக்கும்.

* பெண்கள் மாதவிடாய் காலத்தில் ரெட் பீன்ஸ், பட்டாணி, கோதுமை, அவகாடோ, பிரக்கோலி, கொய்யா ஆகியவற்றை சாப்பிடலாம்.

Exit mobile version