உடல் எடையை அதிகரிக்க சில டிப்ஸ்! உடனே டிரை செய்து பாருங்கள்!

0
215

உடல் எடையை அதிகரிக்க சில டிப்ஸ்! உடனே டிரை செய்து பாருங்கள்!

ஒருசிலர் உடல் எடை குறைப்பதற்கு என்ன செய்வது என்று பார்த்து கொண்டிருக்கும் நிலையில் பெரும்பாலானோர் உடல் எடையை எவ்வாறு அதிகரிப்பது என முயற்சி செய்து வருகின்றனர்.ஆரோக்கியமான உடல் எடையை அதிகரிக்க தேவையான உணவுப் பொருட்கள் பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம்.

தற்போது உள்ள காலகட்டத்தில் நாம் தினமும் ஏதேனும் ஒரு பணிகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். உடலில் ஏற்படும் மாற்றங்களை நாம் கண்டு கொள்வதில்லை இதனால் உடல் மெலிதாகி விடுகிறது. அதனை எவ்வாறு எவ்வித உணவுகளின் மூலம் ஆரோக்கியமான உடல் எடையை பெறுவது என தெரிந்து கொள்ளலாம்.

புரோட்டின் நிறைந்த பொருட்கள்:

உடல் எடையை அதிகரிக்க நாம் தினமும் சாப்பிடக்கூடிய பொருட்களில் அதனுடன் புரோட்டின் அதிகம் நிறைந்த பொருட்களை எடுத்துக் கொள்வது மிக அவசியம். புரோட்டின் நிறைந்த உணவுகளான தயிர், பால், சிக்கன், முட்டை, நெய் போன்ற உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்

கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப் பொருள்

உடல் எடையை அதிகரிக்க கார்போஹைட்ரேட் நிறைந்த உணவு பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் நிறைந்த பொருட்கள் சோளம், பூசணிக்காய், ஸ்வீட், உருளைக்கிழங்கு போன்ற கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்த உணவுகளை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நாம் தினமும் சாப்பிடும் கலோரிகளை சரியான முறையில் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். சராசரியாக ஒரு மனிதனுக்கு தேவைப்படும் கலோரியானது 1200 கலோரிகள் அல்லது 1500 கலோரிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்