தற்போதுள்ள வைரஸ்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு புதுமையாக ஒன்று தோன்றி மக்களை அச்சுறுத்தும்! எச்சரிக்கை விடுத்த நிறுவனம்!
கடந்த ஒன்றரை வருடகாலமாகவே கொரோனா நோய் தொற்று நம் நாட்டு மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. நாம் என்னதான் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், இரண்டு தடுப்பூசிகளை பூர்த்தி செய்து விட்டாலும் கூட, சிலருக்கு கொரோனா ஏற்படுவது பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தடுப்பூசி போடுவதால் உயிர் போகும் அபாயம் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது. அதன் காரணமாக மக்கள் முன் வந்து தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். தற்போது மேலும் கொரோனாவை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் அப்டேட்டட் வைரஸின் பல வைரஸ்கள் தோன்றி உள்ளது.
புதுசாக AY4.2 தற்போது கொரோனாவின் புதிய வடிவமாக கண்டறியப் பட்டுள்ளது. பல நாடுகளில் பரவியும் வருகிறது. பொதுவாக கொரோனா வந்ததிலிருந்தே பல்வேறு நோய்களும் பரவ ஆரம்பித்துள்ளன. வித விதமான நோய்கள் மக்களை காவு வாங்க தயாராக உள்ளது. மிக அதிக அளவில் நோய்கள் பரவுகிறது.
டெங்கு அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஜிகா வைரஸ் புதிதாக வந்துள்ளது. ஆக மொத்தத்தில் நாம் எவ்வளவு நாள் இருப்போம் என்பதே யாருக்கும் நிலையான கணக்கு இல்லை என்பது போல் ஆகிவிட்டது. நேற்று பார்த்தவர்களை இன்று பார்க்க முடிவதில்லை. கடந்த வாரம் பார்த்த நபர்களை கேட்டால் இறந்து போய்விட்டார்கள் என்று கூறுகிறார்கள்.
தற்போதுள்ள இந்த அபாய சூழ்நிலையில் சுகாதாரம் மற்றும் நிதி மந்திரிகள் கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பு இயக்குநர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் ஒரு கட்டத்தில் நாட்டில் நம்மால் கட்டுப்படுத்த முடியாத மற்றொரு வைரஸ் கண்டிப்பாக வெளிப்படும் என்பது உயிரியல் ரீதியான உறுதி என்று அப்பட்டமாக கூறியிருக்கிறார்.
எனவே நமது சமூகம் அடுத்த நோய்தொற்றுக்கு தயாராகும் வகையில் தற்போதைய தொற்றிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அதாவது தற்போது உள்ள வழிமுறைகளை அப்படியே கைப்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். வெளியே போனால் வந்தவுடன் குளிப்பது, முகக் கவசம் அணிவது, கை மற்றும் கால்களைக் கழுவி சுத்தமாக வைத்திருப்பது பேன்றவை ஆகும்.
மேலும் சூடாக சமைத்து, சுவையாக உண்பது போன்றவற்றை அப்படியே தொடர சொல்கிறார். கொரோனா தோற்று பரவ ஆரம்பத்தில் இருந்தே பலரது உணவுப் பழக்க வழக்கங்களில் மிகவும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் இதற்காக வலுப்படுத்தப்பட்ட, அதிகாரமளிக்கப்பட்ட மற்றும் நிலையான நிதி அளிக்கப்பட்ட உலக சுகாதார அமைப்பு தேவை எனக் கூறிய கேப்ரிசியஸ், இது தொற்று நோய்களுக்கு விரைவான எதிர் தாக்குதலையும், சிறந்த நிர்வாகத்தையும் உறுதி செய்வதற்கான, ஒரு புதிய வழிமுறை எனவும் தெரிவித்துள்ளார்.