Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெற்ற தந்தையை கம்பத்தில்  கட்டி வைத்து மகன் மற்றும் மருமகள் கொடூர வெறிச்செயல்!..

Son and daughter-in-law brutally tied the father to a pole!..

Son and daughter-in-law brutally tied the father to a pole!..

பெற்ற தந்தையை கம்பத்தில்  கட்டி வைத்து மகன் மற்றும் மருமகள் கொடூர வெறிச்செயல்!..

ஒடிசாவிலுள்ள கோராபுட் மாவட்டத்தை சேரந்தவர் தான் குர்ஷா மணியக்கா.இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இவருக்கும் அவரது மகனுக்கும் அவ்வப்போது சண்டை ஏற்படுவது வழக்கம்.இதே போல் நேற்று முன்தினம் இருவருக்கும்  தகராறு ஏற்பட்டுள்ளது.

அந்த தகராறு முற்றிய நிலையில் அவர் தனது மகன் வீட்டின் மேற்கூரையை உடைத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவரின் குடும்ப உறுப்பினர்கள் அவரை பிடித்து  மின்கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர்.பின் அந்த வயதானவரை பெரிய உருட்டு கட்டையில் இடை விடாது சரமாரியாக தாக்கினர்.

மேலும் மணிக்காவின் மகன் மற்றும்  மருமகள் சேர்ந்து அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அந்த முதியவருக்கு  பலத்த காயம் ஏற்பட்டது.ரத்த வெள்ளத்தில் அந்த  முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து உடனடியாக அந்த முதியவரின் உடலை எரித்துள்ளனர்.

இந்நிலையில் மணிக்காவை அவரது குடும்பத்தினர் தாக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக வைரலானது. இதனையடுத்து தாக்குதல் சம்பவம் குறித்து காவல் துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விசாரணையில் போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

மேலும் தலைமறைவாக இருக்கும் மகன் மற்றும் மருமகள் இருவரை போலீசார்  தேடி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது.

Exit mobile version