Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இங்கிலாந்தில் கவுன்சிலரான அதிமுக பிரபலத்தின் மகன்!!

#image_title

இங்கிலாந்தில் கவுன்சிலரான அதிமுக பிரபலத்தின் மகன்.
இங்கிலாந்து நாட்டின் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ அவர்களின் மகன் கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளது இந்திய அரசியலில் பெருமையான விஷயாமாக பார்க்கப்படுகிறது.
அதிமுக கட்சியில் எம்.ஜி.ஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் எம்.எல்.ஏவாக இருந்தவர் பாப்பா சுப்பிரமணியன் அவர்கள் ஆவார். இவரது மூத்த மகன் தான் இங்கிலாந்து நாட்டின் கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வெற்றியழகன். இவர் இங்கிலாந்து நாட்டிற்கு  குடியேறி கடந்த 15 வருடங்களாக லண்டனில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இங்கிலாந்து நாட்டின் குடியுரிமையை பெற்று அங்கு குடும்பத்துடன் வசித்து வரும் வெற்றியழகன் அவர்கள் இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆகியுள்ளார். இங்கிலாந்தில் கவுன்சிலர் ஆன வெற்றியழகன் அவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Exit mobile version