தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு எந்த அளவு வரவேற்பு உள்ளதோ அதே அளவான வரவேற்பைப் பெற்றவர் தான் தல அஜித். இருவரும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக தொலைத்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் மெர்சல். இந்தப் படம் வசூல் ரீதியாக பெரிய சாதனையும் புரிந்தது.
மேலும் இந்த படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் தளபதி விஜயின் மகனாகவும், சிறுவயதில் விஜய் ஆகவும் நடித்தவர்தான் அக்சத் தாஸ் என்னும் குழந்தை நட்சத்திரம். அக்சத் தாஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் தளபதி தல அஜித்துடன் விரைவில் நடிக்க உள்ளதாக கூறியுள்ளார். எனவே இவர் தல அஜித்தின் வலிமை திரைப்படத்தில் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. இதை அறிந்த அஜித் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.