Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரபல நடிகையின் மரணத்தில் திருப்பம்.. பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்!

பிரபல நடிகையின் மரணத்தில் திருப்பம்.. பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்!

நடிகை சோனாலி போகத் சில தினங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் கோவாவில் மரணமடைந்தார்.

ஹரியானாவைச் சேர்ந்த முன்னாள் டிக் டாக் பிரபலமான சோனாலி போகத் பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டார். பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட இவர் சமூகவலைதளங்களில் அதிகளவில் பாலோயர்களை பெற்றிருந்தார். தற்போது தனது சில ஊழியர்களுடன் கோவாவுக்குச் சென்றிருந்தார்.

திங்கள்கிழமை இரவு அவர் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட போது கோவா மாவட்டத்தில் உள்ள அஞ்சுனாவில் உள்ள செயின்ட் அந்தோணி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் அங்கு செல்வதற்கு முன்பாகவே உயிரிழந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

சோனாலி, 13 மணி நேரத்திற்கு முன்புதான் சமூகவலைதளத்தில் தன்னுடைய புதிய படத்தை வெளியிட்டு இருந்தார். சோனாலி போகட்டின் உடல் கோவாவில் இருந்து டெல்லிக்கு கொண்டு வரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மகள் யசோதரா ஆற்றுப்படுத்த சோகத்தில் உள்ளார். இந்த மரணம் சம்மந்தமாக விசாரணைகள் நடந்துவரும் நிலையில் தற்போது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

அறிக்கையில் “”உடலில் பல அப்பட்டமான காயங்கள் உள்ளன. மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை விசாரணை அதிகாரி உறுதிப்படுத்த வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. அதில் சோனாலியின் உடலில் காயங்கள் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மரணம் குறித்த சந்தேகங்கள் அதிகமாகியுள்ளன. இதையடுத்து வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version