Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விவாகரத்து ஏற்பட இது ஒன்றுதான் காரணம்: ஆர்எஸ் தலைவரின் கருத்துக்கு பிரபல நடிகை கண்டனம்

விவாகரத்து ஏற்பட இது ஒன்றுதான் காரணம்: ஆர்எஸ் தலைவரின் கருத்துக்கு பிரபல நடிகை கண்டனம்

தற்போது விவாகரத்து பெறுவது என்பது மிக அதிகமாகி வரும் நிலையில் இந்த விவாகரத்துக்கு கல்வியும் வசதியும் தான் காரணம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அவர்கள் கூறியுள்ளார்

திருமண உறவுகளில் விவாகரத்து ஏற்படுவது என்பது படித்தவர்கள் மற்றும் வசதி படைத்தவர்களின் மத்தியில் மட்டும் தான் என்றும், ஏழை எளியவர்கள் மற்றும் கல்வி கற்காதவர்கள் விவாகரத்து செய்வதில்லை என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருந்தார்

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் இந்த கருத்து குறித்து தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள நடிகை சோனம் கபூர் ”அறிவுள்ள எந்த மனிதரும் இப்படிப் பேசுவார்களா? இந்த கருத்து முட்டாள்தனமான பிற்போக்கான கருத்து” என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்

ஆர்எஸ்எஸ் தலைவரின் திருமணம் விவாகரத்து குறித்த கருத்தும் அதற்கு சோனம் கபூர் தெரிவித்த பதிலடியும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

மோகன் பகவத் கருத்தை பிற்போக்குத்தனமானது என்று சோனம்கபூர் விமர்சனம் செய்தாலும் நெட்டிசன்கள் பலர் இவரது கருத்தை ஆதரித்து வருகின்றனர். கல்வி, வசதி ஏற்படுத்திய தன்னம்பிக்கை தான் விவாகரத்துக்கு முக்கிய காரணம் என்றும், இது இரண்டும் இல்லாதவர்கள் கருத்துவேறு ஏற்பட்டாலும் வேறு வழியின்றி விவாகரத்து முடிவை எடுக்காமல் அதிருப்தியுடன் வாழ்ந்து வருகின்றார்கள் என்றும் கூறியுள்ளனர்.

Exit mobile version