லதா ரஜினி பாடிய சூப்பர் ஹிட் சாங்க்ஸ்!!

0
195
#image_title

லதா ரஜினி பாடிய சூப்பர் ஹிட் சாங்க்ஸ்!!

லதா ரஜினிகாந்த் ஒரு இந்தியத் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் பின்னணி பாடகி ஆவார். 1981 பிப்ரவரி 26ஆம் தேதி ரஜினிகாந்தை மணந்து கொண்டார்.

லதா ரஜினிகாந்த் தயாரிப்பாளராகத் தனது கணவரை வைத்து மாவீரன் (1986) வள்ளி (1993) போன்ற இரு திரைப்படங்களை இயக்கியுள்ளர்.இந்த இரண்டு படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத் திகழ்ந்தது.

அதன்பின் லதா ரஜினிகாந்த், கமலஹாசன் நடித்து வெளியான டிக் டிக் டிக் படத்தில் “நேற்று இந்த நேரம் ஆற்றங்கரை ஓரம்” எனும் பாடலின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார்.

இரண்டாவதாக அன்புள்ள ரஜினிகாந்த் என்னும் படத்தில் “கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே” எனும் பாடலின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

அதன்பின் அவர் இயக்கிய “வள்ளி” திரைப்படத்தில் “டிங்கு டாங்குரப்பப்போ” மற்றும் “குக்குக்கூ கூ கூ கூவும்” எனும் இரண்டு பாடல்களையும் பாடியுள்ளார். இந்த இரண்டு பாடல்களும் இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற பாடலாகத் திகழ்கிறது.

ரஜினிகாந்த் அவர்களின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கார்ட்டூன் வடிவமைப்பில் இயக்கி வெளியான திரைப்படம் தான் “கோச்சடையான்”. இந்த திரைப்படத்தில் மணப்பெண் சத்தியம் என்றப் பாடலை லதா ரஜினிகாந்த் அவர்கள் பாடியிருப்பார். இவரது குரலில் வெளிவந்த இந்த பாடலானது இன்று வரை திருமண விழாக்களில் ஒழிக்கப்படும் பாடல்களில், முக்கிய பங்கு வகிக்கிறது.