Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சோனியாகாந்தியின் சுவாசப் பாதையில் ஏற்பட்ட தொற்று பாதிப்பு! உயிர் பிழைப்பாரா சோனியா காந்தி!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த 2ஆம் தேதி நோய்தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சைபெற்று வந்தார்.

நோய்தொற்று பாதிப்பு தொடர்பான பிரச்சனைகளில் அவதியுற்று வந்த அவருக்கு திடீரென்று மூக்கிலிருந்து அதிகளவில் ரத்தக்கசிவு உண்டானதால் 12ஆம் தேதி டெல்லி கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவருகிறார் என்றும், சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் நோய்த்தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிற சோனியாகாந்திக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், அது குறித்து சிகிச்சைமுறைகள் நேற்று காலை வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அவருடைய சுவாசப் பாதையில் கருப்பு பூஞ்சைத் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், நோய்தொற்றுக்கு பிந்தைய அறிகுறிகளுக்கான சிகிச்சையுடன் சேர்த்து பூஞ்சை பாதிப்புக்கும் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், அந்த கட்சியின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு நடுவே சுவாசப்பாதையில் உண்டான பூஞ்சை பாதிப்பிலிருந்து சோனியாகாந்தி மீண்டும் வருவதாக அந்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

சோனியா காந்தியை அவருடைய மகன் ராகுல்காந்தி, மகள் பிரியங்காகாந்தி, உள்ளிட்டோர் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்து கவனித்து வருகிறார்கள்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராகுல் காந்தியிடம் 3 நாட்களாக 30 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

சோனியா உடல் நிலையை குறிப்பிட்டு ராகுல் காந்தி வழக்கு விசாரணையில் ஆஜராக கடிதம் மூலமாக கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து அவரிடம் ஜூன் மாதம் 20ஆம் தேதி விசாரணை நடத்த உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோனியாகாந்தியும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார், அவருடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி அவர் ஆஜராக அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version