Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சோனியா காந்தியின் பழைய கதைகளை எல்லாம் கிளறும் ராஜா : ஆதாரங்களை வெளியிட்டதால் புதிய சர்ச்சை!

கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் சாதுக்கள் இருவர் சில சமூக விரோதிகளால் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது மேலும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.

இதற்கிடையில் மாஹாராஷ்டிர அரசு தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சம்பந்தப்பட்ட கொலைகாரர்களை கைது செய்தது. இந்த கொலைகாரர்கள் கைது செய்யப்பட்டாலும் அவர்களை போலீசார் கடுமையாக தாக்கியதால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

இதனையடுத்து பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் இந்த நிகழ்விற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். இதனால் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட மதவாத அமைப்புகளும் காங்கிரஸ் கூட்டணி கட்சியினருக்கும் பெரும் கருத்து மோதல்கள் உருவானது.

இந்த நிலையில் பிரபல செய்தி தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமி கேள்வி ஒன்றை எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சி நடந்த பிறகு பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமி தனது மனைவியுடன் வீட்டிற்கு வரும் வழியில் சில குண்டர்களால் தாக்கப்பட்டார்.

அர்னாபும் அவரது மனைவியும் தாக்கப்பட்டதால் இந்த விவகாரம் நாடு முழுவதும் வேகமாக பரவியது, அதோடு அப்படி என்ன கேள்வியை கேட்டு விட்டார் என்றும் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தனர். அந்த விவாத நிகழ்ச்சியில் அர்னாப் ‘இதே இடத்தில் இரண்டு சாதுக்களுக்கு பதிலாக இரண்டு கிருஸ்துவ மதபோதகர்கள் கொல்லப்பட்டிருந்தால் சோனியா என்ன பதில் அளிப்பார்’ என்று கேட்டிருந்தார்.

மேலும் சோனியா காந்தியின் உண்மையான பெயரான கூறியதால் தான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் என்று ஹச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதோடு சோனியாவின் நிஜ பெயரான ஆண்டனியோ மைனோ தான் என்று அவரின் குடியுரிமையில் உள்ளதாக ஆதாரத்துடன் ராஜா பதிவிட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.

Exit mobile version