ஸ்டாலினுக்கு செக் வைக்க தயாரான சோனியா! சிதம்பரத்தை வைத்து ஆடப்போகும் காங்கிரஸ்
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பா.சிதம்பரத்தை நியமிக்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன,.
தற்போது இடைக்கால தலைவராக இருக்கும் சோனியா காந்தி வயது முதிர்வு காரணமாக மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை வீரியமாக எடுத்து செல்ல முடியாமல் தவித்து வருகிறார்,. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்களும் தற்போதைக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை மீண்டும் ஏற்க மறுத்து வருகிறார்,. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கட்சியை மேலும் பலப்படுத்தி பழைய நிலைக்கு கொண்டுவர சோனியாகாந்தி முடிவெடுத்துள்ளார்,.
ஏற்கனவே ராஜதந்திரம் மூலம் மகாராஷ்டிராவை பாஜகவிடம் இருந்து கைப்பற்றியது போல் காங்கிரசுக்கு செல்வாக்கு உள்ள மாநிலங்களை மீண்டும் மாநிலக் கட்சிகளின் உதவியுடன் கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் சோனியா காந்தி தீவிரமாக செயல்படுகிறார்,. சிறந்த பொருளாதார வல்லுநர் பா.சிதம்பரத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக நியமித்து பாரதிய ஜனதா கட்சிக்கு பொருளாதார வீழ்ச்சியின் வாயிலாக நெருக்கடியை கொடுக்க திட்டம் வகுத்து வருகிறார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,.
மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பெற்ற வெற்றியின் மூலம் மு.க.ஸ்டாலின் அகில இந்திய அளவில் மிகப்பெரிய தலைவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வருகிறார், இதற்கு துணையாக திமுக எம்பிக்கள் இருந்து வருகின்றனர்,. மு.க.ஸ்டாலினின் இந்த வளர்ச்சி பா.சிதம்பரத்திற்கு நெருக்கடியை உருவாக்கும் என தமிழக காங்கிரஸார் அகில இந்திய தலைமை பொறுப்பாளர்களிடம் சொல்லி வருகின்றனர்,.
தேசிய அளவில் சிறந்த பொருளாதார நிபுணரும் முன்னாள் மத்திய அமைச்சரும் போன்ற பெருமை பா.சிதம்பரத்திற்கு இருக்கின்றது,. ஸ்டாலின் நமக்கு பின் தான் என்றுமே அடையாளமாக இருக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சிதம்பரமும் காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,.
ஐ.என்.எக்ஸ் வழக்கில் சிக்கி தவித்து வரும் சிதம்பரத்தை தற்போது காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டால் நமக்கு மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும் என்று இதற்கு காங்கிரஸின் மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.