Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சோனியா பதவியை விட்டு விலகுகிறாரா? காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு

லோக்சபா 2019 தேர்தலுக்கு பிறகு ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை விட்டு விலகினார். இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பதவியை வகித்து வந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் சோனியாகாந்திக்கு கடிதம் எழுதியதாகவும் அதில் கட்சியை புதுப்பிக்கவும், பழம்பெரும் கட்சிக்கு திறன் மிகுந்த தலைமை வேண்டுமென்றும், கட்சியின் உட்கட்டமைப்பில் மாற்றங்கள் வேண்டுமென்றும் குறிப்பிட்டு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது..

ஆயினும் இப்படி ஒரு கடிதம் யாரும் எழுதவில்லையென காங்கிரஸ் மறுப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ராகுலுக்கு ஆதரவு:

காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்களும், பெரும்பான்மையான தொண்டர்களும் ராகுல் காந்தியே மீண்டும் கட்சியின் தலைவர் பதவிக்கு வரவேண்டுமென்று விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டுமென்றும் சில குரல்கள் காங்கிரசில் ஒலிப்பதாக தெரிகிறது.

அதேநேரத்தில் சோனியாகாந்தியே தலைவர் பதவியை தொடர வேண்டுமென்ற குரலும் ஒலிக்கிறது. ஆனால் சோனியாகாந்தி தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு தலைவர் பதவியில் தொடர்ந்து வகிப்பதில் விருப்பம் தெரிவிக்கவில்லை என்பதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை காணொளி காட்சி மூலம் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பதை இக்கூட்டத்தில் முடிவெடுப்பார்கள் என்று தெரிகிறது

Exit mobile version