Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திமுக விற்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்! சோனியா காந்தி கடிதம்!

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அழுத்தம் தர வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்தார் இதுபற்றி மேலும்,மம்தா பானர்ஜி, ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட 13 பேருடன் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மருத்துவபடிப்பில் ஓபிசி இடஒதிக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி திமுக விற்கு உறுதுணையாக இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.

இதற்கு பதில் கடிதம் எழுதிய திமுக தலைவர் ஸ்டாலின் ஓபிசி சமூகத்தின் மருத்துவக் கனவை நிறைவேற்றும் வகையில்,மாநில இட ஒதுக்கீட்டை நிலைநிறுத்தும் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து வரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களுக்கு நன்றி என கூறினார்.

இது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version