Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விரைவில் ஒ பன்னீர் செல்வம் இணைந்து கொள்வார்!! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!!

#image_title

விரைவில் ஒ பன்னீர் செல்வம் இணைந்து கொள்வார்!! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!!

அதிமுக முன்னாள் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் அவர்கள் விரைவில் திமுக கட்சியில் சேர்ந்து விடுவார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கூறியுள்ளார்.

நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது மே 6ம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியை காண அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் அனிருத், நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் தனுஷ் என பல பிரபலங்கள் வந்திருந்தனர்.

இந்த போட்டியை காண முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் அவர்களும், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் மருமகன் சபரீசன் அவர்களும் வந்திருந்தனர்.

இந்த கிரிக்கெட் போட்டிக்கு இடையே ஓ பன்னீர் செல்வம் அவர்களும் சபரீசன் அவர்களும் சந்தித்து பேசியுள்ளனர்.

இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது. இதையடுத்து இந்த சந்திப்பை வைத்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் திமுக கட்சியில் ஒ பன்னீர் செல்வம் விரைவில் சேர்ந்து விடுவார் என்று கூறியுள்ளார்.

ஒ பன்னீர் செல்வம் மற்றும் சபரீசன் அவர்களின் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “சபரீசன் மற்றும் ஓ பன்னீர் செல்வம் அவர்களின் இந்த சந்திப்பு மூலமாக ஓ பன்னீர் செல்வம் அவர்கள் திமுக கட்சியின் பீடமாக செயல்படுகிறார் என்பது தெரிகின்றது.

சட்டப் பேரவையில் ஏற்கனவே ஓ பன்னீர் செல்வம் அவர்கள் மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்களையும், தற்போதைய முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களையும் பாராட்டி பேசினார்.

இப்போது பூனைக் குட்டியானது வெளியே வந்த கதையாக மக்களுக்கு ஓ பன்னீர் செல்வம் அவர்கள் இந்த சந்திப்பு மூலம் மீண்டும் ஒரு முறை நிருபித்துள்ளார். விரைவில் அவர் திமுக கட்சியில் சேரந்து விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை” என்று கூறியுள்ளார்.

Exit mobile version