Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விரைவில் ஹீரோவாகும் KPY பாலா..பிரபல நடிகர் கூறிய அதிரடி அறிவிப்பு..!!

Soon to be a hero KPY Bala.. Action announcement by famous actor..!!

Soon to be a hero KPY Bala.. Action announcement by famous actor..!!

விரைவில் ஹீரோவாகும் KPY பாலா..பிரபல நடிகர் கூறிய அதிரடி அறிவிப்பு..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் காமெடி நடிகர் பாலா. இவரின் டைமிங் காமெடிகளுக்கென தனி ரசிகர்கள் உள்ளனர். அதன் மூலம் இவருக்கு வெள்ளித்திரையில் காமெடியனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார்.

 இதுதவிர சில நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி வருகிறார். இதைவிட முக்கியம் பாலா படங்களில் மட்டுமே காமெடியனே தவிர ரியல் லைஃபில் ஹீரோவாக உள்ளார். ஏனெனில் தனக்கு கிடைக்கும் சம்பளத்தை வைத்து கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார். 

ஆரம்பத்தில் தனியாக உதவிகளை செய்து வந்த பாலா சமீபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், ராகவா லாரன்ஸ் ஒரு முக்கிய அறிவிப்பை கூறிய பாலாவை நெகிழ்ச் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

அதாவது ராகவா லாரன்ஸ் மற்றும் பாலா ஆகிய இருவரும் நேற்று ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்தனர். அப்போது பாலாவை தான் ஹீரோவாக்க உள்ளதாகவும், கதை இருந்தால் இயக்குனர்கள் தன்னிடம் எடுத்து வாருங்கள் என்று லாரன்ஸ் அறிவித்தார்.

இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத பாலா மகிழ்ச்சியில் செய்வதறியாது லாரன்ஸ் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். உடனே அவரை கட்டியணைத்த லாரன்ஸ் ஹீரோ சார் என்று அங்கு அறிமுகம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து பலரும் பாலாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Exit mobile version