தொண்டை வலி கரகரப்பு எரிச்சல் குரல் மாற்றம் 3 நாட்களில் சரியாக 

0
268
#image_title

தொண்டை வலி கரகரப்பு எரிச்சல் குரல் மாற்றம் 3 நாட்களில் சரியாக 

தொண்டை வலி பொதுவாக அனைத்து வயதினருக்கும் வரக்கூடியதாக இருக்கிறது. பலருக்கு சளி பிடிக்கும் நேரங்களில் தொண்டை வலி வரக்கூடும். சுத்தமான உணவு மற்றும் தண்ணீரை உட்கொள்ளாத போது அதில் உள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் தொண்டை வலி வரக்கூடும். தொண்டை வலி உள்ளவர்களால் சில சமயங்களில் உணவு விழுங்க முடியாது. ஏன் எச்சிலை கூட முழுங்க முடியாத சூழ்நிலை உருவாகலாம். இதை குறைக்கும் எளிய வீட்டு வைத்திய முறையை பார்ப்போம்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றவும். அதில் ஒரு ஸ்பூன் துருவிய இஞ்சியை சேர்க்கவும். தொண்டையில் உள்ள புண்ணிற்கு இஞ்சி ஒரு மிகச்சிறந்த மருந்தாகும். தொண்டையில் ஏற்படக்கூடிய கரகரப்பை நிமிடத்தில் போக்கிவிட கூடியது. தொண்டைக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.

அடுத்து பத்து மிளகு சேர்க்கவும். இருமல் சளி நேரங்களில் மிளகு சாப்பிடுவது அது மேலும் அதிகரிக்காமல் தடுக்கும். தொண்டை புண்ணை குணமாக்கும்.

அடுத்து ஒரு சிறிய துண்டு பட்டை சேர்க்கவும். பட்டையில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் ஆன்ட்டி பாக்டரியல் தன்மை தொண்டைக்கு ஒரு நல்ல புத்துணர்ச்சியை கொடுக்கும்.

அடுத்து ஐந்து உலர் திராட்சைகளை சேர்க்கவும். இது தொண்டையில் உள்ள புண்களை ஆற்றக்கூடியது.

அடுத்து ஐந்து துளசி இலைகளை அலசி போடவும். தொண்டையில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு துளசி இலை நல்ல மருந்தாகும்.

இது நன்கு கொதிக்க வேண்டும் கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும். மஞ்சள் ஒரு கிருமி நாசினியாகும்.

இது ஓரளவு ஆறியதும் வடிகட்டிக் கொள்ளவும். அடுத்து ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும்.

இதை தொண்டையில் பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் தயார் செய்து குடிக்கலாம். கடகடவென குடிக்க கூடாது. பொறுமையாக சாறு தொண்டையில் படுமாறு குடிக்க வேண்டும்.

இல்லையெனில் காலை மாலை என இருவேளைகளிலும் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து செய்து குடிக்கலாம். இதனால் தொண்டை சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளும் நீங்கும்.