பா ரஞ்சித்தின் சாதிய பேச்சுக்கு சமயம் பார்த்து பழிவாங்கிய தென் மாவட்ட மக்கள்
இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவான ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீப காலங்களில் சாதிய உரிமையை பேசுகிறேன் என்ற பெயரில் இவர் பேசியது மற்றும் இவரின் படத்தின் மூலமாக கூறப்பட்ட கருத்துக்கள் தற்போது அவருக்கு எதிராகவே அமைந்து விட்டது.
சமீபத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தையடுத்து பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள அடுத்த படம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், கயல் ஆனந்தி, பிக்பாஸ் புகழ் ரித்விகா, முனீஸ்காந்த் போன்ற பலர் நடித்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்திற்கான தமிழக உரிமை சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்திற்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்த இயக்குனர் பா.ரஞ்சித் தொடர்ந்து பொதுவெளியில் தலித் உரிமை சம்பந்தமாக அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்திருக்கிறார். மேலும் இவர் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் தமிழகத்தில் நிலவி வரும் ஜாதி தீண்டாமையை கூறுகிறேன் என்ற பெயரில் பல இடங்களில் சகோதரர்கள் போல பழகி வரும் மக்களிடையே மீண்டும் சாதிய பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் காட்சிகளை அமைத்திருந்தார்.
பரியேறும் பெருமாள் படம் வெளியான போதும் பெரும்பாலான திரையரங்குகளில் அதை வெளியிட மறுத்ததால் மிகக் குறைவான திரையரங்குகளில் மட்டுமே வெளியாகியது. பின்னர் திருமாவளவன் மற்றும் வேல்முருகன் போன்ற அரசியல் தலைவர்கள் ஆதரவுடன் கொஞ்சம் காட்சிகள் அதிகரிக்கப்பட்டன.
ஆரம்பத்தில் படத்துக்கு திரையரங்குகளை ஒதுக்கீடு செய்வதற்கு குறிப்பிட்ட சில விநியோக பகுதிகளில் உரிமையாளர்கள் மத்தியில் பெரும்பாலும் ஆர்வம் காட்டவில்லை. அதற்குக் காரணம் பா.ரஞ்சித் தொடர்ந்து தலித் உரிமை பற்றி அதிகமாக பேசி வருவது மற்றும் அதன் மூலம் மக்களிடையே சாதிய பிரிவினைகளை தூண்டுவது தான் எனக் கூறப்பட்டது.
அதைப்போலவே தற்போது வெளியாகவுள்ள இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படத்திற்கும் தென் மாவட்டங்கள் முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குறிப்பாக சில சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் ஊர்களில் இந்த படத்தை திரையிட வேண்டாம் என்று தியேட்டர் உரிமையாளர்களுக்கு சில அமைப்புகள் மூலமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதை மீறி இந்த படத்தை திரையிட்டாலும் யாரும் வந்து பார்க்கமாட்டார்கள் அதனால் உங்களுக்குத்தான் நஷ்டம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். பா.ரஞ்சித் தன்னுடைய அரசியல் விளம்பரத்திற்காக சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் சாதிய கருத்துக்களை பேசியது தற்போது அவருக்கே எதிராக அமைந்துள்ளது