Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இரண்டாவது முறையாக இடிந்து விழுந்த தென்பெண்ணை அணைகள்.

ThenPennai Dam - News4 Tamil Online Tamil News

ThenPennai Dam - News4 Tamil Online Tamil News

விழுப்புரத்தில் இருக்கும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை இரண்டாவது முறையாக உடைந்து நீர் முழுவதும் வெளியேறி வருவது குறித்து அந்த மாவட்ட ஆட்சியர் மோகன், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

கடந்த ஓராண்டுக்கு முன்பாக விழுப்புரம் அருகிலுள்ள தளவானூர் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எனதிரிமங்கலத்திற்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டபபட்டது.

தடுப்பணை கட்டிய ஒரு மாதத்திற்குள்ளாகவே பெய்த கனமழை காரணமாக தடுப்பணையில் ஒரு பகுதியான கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எனதிரிமங்கலம் பகுதியில் உள்ள கதவணைகளில் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டது.

இதனால் நீர் தேக்கி வைக்க முடியாமல் முழுவதுமாக அப்போது வெளியேற்றப்பட்டது அதனைத் தொடர்ந்து மண் சுவர்கள் எழுப்பப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இன்று காலை விழுப்புரம் மாவட்டம் தளவானூர் பகுதியைச் சேர்ந்த தடுப்பணையின் ஒரு பகுதி முற்றிலுமாக உடைந்து பெரும் சேதம் ஏற்பட்டது.

இதனால் தண்ணீர் முற்றுலுமாக தற்போது வெளியேறி வருகிறது. உடைப்பு ஏற்பட்ட பகுதியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் மாவட்ட ஆட்சியர் மோகன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

தண்ணீர் எங்கும் வராமல் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் கடலூர் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான நீர்ப்பாசன வசதி இந்த ஆண்டும் இல்லாமல் போகும் நிலையே இருந்து வருகிறது.

உடனடியாக தண்ணீர் வெளியேராமல் தடுப்பதற்கான மாற்று முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, அணைகள் கட்டி முடிக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள்ளாகவே உடைப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு இப்போதும் மற்றொரு பகுதியிலும் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த உடைப்புக்கு காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் 15 கோடி ரூபாய் செலவில் இந்த அணை மறு சீரமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

Exit mobile version