தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்தப் பகுதிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் சிறப்பு ரயில் இயக்கம் அதற்கான முன்பதிவு தொடக்கம்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெரும் தொற்று பரவி இருந்தது. அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்த நிலையில் போக்குவரத்து சேவைகள் படிப்படியாக மீண்டும் தொடங்கியது. இருப்பினும் மக்கள் கூட்ட நெரிசலில் செல்ல அச்சமடைந்து பேருந்துகள் போன்ற போக்குவரத்தில் பயணம் செய்யவில்லை.
மேலும் நீண்ட தூர பயணம், கூட்ட நெரிசல் இல்லாத பயணம் என ரயில் பயணத்தையே மக்கள் விரும்பினார்கள் அதனால் தெற்கு ரயில்வே சார்பில் அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு ரயில்கள்,கூடுதல் ரயில்கள் என இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கேரளத்தின் கொச்சுவேலியில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படும் ஒரு வழி சிறப்பு ரயில் வண்டி எண் 06042 அடுத்த நாள் காலை 8 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
மேலும் இந்த ரயில் திருவனந்தபுரம், நாகர்கோவில் நகர், திருநெல்வேலி, கோவில்பட்டி, வள்ளியூர், சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, வழியாகவும் இயக்கப்படுகின்றது என தெரிவித்துள்ளது.
இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது எனவும் தெரிவித்துள்ளது. அதனால் பயணிகள் முன்பதிவு நிறைவிற்கு முன்பு விரைவில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் தெற்கு ரயில்வே சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.