Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! அடுத்த மூன்று மாதங்களுக்கு சிறப்பு ரயில் சேவை!

Southern Railway announced! Special train service for the next three months!

Southern Railway announced! Special train service for the next three months!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! அடுத்த மூன்று மாதங்களுக்கு சிறப்பு ரயில் சேவை!

தெற்கு ரயில்வே நேற்று அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டது. அந்த அறிவிப்பில் கோடை காலத்தில் பயணிகளின் கூட்டணி நெரிசலை தடுக்கும்  வகையில் தற்போது திருநெல்வேலி தாம்பரம் இடையிலான சிறப்பு ரயில் சேவை  அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஏப்ரல் 2, 9, 16, 23 ஆகிய தேதிகளிலும், மே மாதத்தில் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளிலும், ஜூன் மாதம் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில இரவு  7.20 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் இந்த ரயிலானது மறுநாள் காலை 9 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

மறுமார்கமாக ஏப்ரல் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளிலும், மே மாதம் 8, 15, 22, 29 ஆகிய தேதிகளிலும், ஜூன் மாதம் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளிலும் அனைத்து திங்கட்கிழமைகளிலும் தாம்பரத்திலிருந்து இரவு 10:20 மணிக்கு புறப்படும் இந்த ரயிலானது மறுநாள் காலை 10:40 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும்.

திருநெல்வேலியில் இருந்து புறப்படும் சேரன்மாதேவி அம்பாசமுத்திரம், கீழ கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், வில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், திண்டுக்கல், திருச்சி, மதுரை, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வந்தடையும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version