Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இன்று மற்றும் நாளை இங்கு ரயில் சேவை ரத்து!

Southern Railway announced! Train service canceled here today and tomorrow!

Southern Railway announced! Train service canceled here today and tomorrow!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இன்று மற்றும் நாளை இங்கு ரயில் சேவை ரத்து!

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள்  நடத்தப்பட்டது.போக்குவரத்து சேவைகள் அனைத்து பகுதிகளுக்கும் ரத்து செய்யப்பட்டது.மேலும் கடந்த ஆண்டு முதல் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

அதனையடுத்து படிப்படியாக போக்குவரத்து சேவைகளும் தொடங்கப்பட்டது.மேலும் கடந்த தீபாவளி பண்டிகை முதல் தற்போது முடிந்த பொங்கல் பண்டிகை வரை அனைத்து பகுதிகளுக்கும் தெற்கு ரயில்வே மூலமாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.

இந்நிலையில் தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் மதுரை வண்டி எண் 20601 இடையே இரவு 10.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் மற்றும் மதுரை இடையே இன்று ரத்து செய்யபடுகின்றது.

அதனை தொடர்ந்து மதுரை எம்.ஜி.ஆர் சென்டிரல் வண்டி எண் 20602 இடையே இரவு 10.50 மணிக்கு புறப்படும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை மற்றும் திண்டுக்கல் இடையே நாளை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

Exit mobile version