தீபாவளி பண்டிகை! மேலும் 8 சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விவரம்!

0
162

தீபாவளி பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் மேலும் 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

ஜாம்நகர் – திருநெல்வேலி, சிறப்பு ரயில் (09578), வாரம் 2 முறை
ஜாம்நகரில் இருந்து நவ. 6ம் தேதி முதல் வெள்ளி, சனிக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் திருநெல்வேலி செல்லும்.

திருநெல்வேலி – ஜாம்நகர், சிறப்பு ரயில் (09577), வாரம் 2 முறை
திருநெல்வேலியில் இருந்து நவ. 9ம் தேதி முதல் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் புதன், வியாழக்கிழமைகளில் ஜாம்நகர் செல்லும்.

புரி – சென்னை சென்ட்ரல், சிறப்பு ரயில் (02859), வாரம் ஒரு முறை
பூரியில் இருந்து வரும் 25ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் திங்கள்கிழமை சென்னை சென்ட்ரல் செல்லும்.

சென்னை சென்ட்ரல் – பூரி, சிறப்பு ரயில் (02860), வாரம் ஒரு முறை
சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 26ம் தேதி முதல் திங்கள்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை பூரி செல்லும்.

விசாகப்பட்டினம் – சென்னை சென்ட்ரல், சிறப்பு ரயில் (02869), வாரம் ஒரு முறை விசாகப்பட்டினத்தில் இருந்து வரும் 26ம் தேதி முதல் திங்கள்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை சென்னை சென்ட்ரல் செல்லும்.

சென்னை சென்ட்ரல் – விசாகப்பட்டினம், சிறப்பு ரயில் (02869), வாரம் ஒரு முறை
சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 27ம் தேதி முதல் செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் புதன்கிழமை விசாகப்பட்டினம் செல்லும்.

புவனேஸ்வர் – சென்னை சென்ட்ரல், சிறப்பு ரயில் (12839), வாரம் ஒரு முறை
புவனேஸ்வரில் இருந்து வரும் 22ம் தேதி முதல் வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை சென்னை சென்ட்ரல் செல்லும்.

சென்னை சென்ட்ரல் – புவனேஷ்வர், சிறப்பு ரயில் (12840), வாரம் ஒரு முறை
சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 23ம் தேதி முதல் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் சனிக்கிழமை புவனேஸ்வர் செல்லும்.

ஹைதராபாத் – தாம்பரம், சிறப்பு ரயில் (02760)
ஹைதராபாத்தில் இருந்து வரும் 20ம் தேதி முதல் தினசரி மாலை இயக்கப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை தாம்பரம் செல்லும்.

தாம்பரம் – ஹைதராபாத், சிறப்பு ரயில் (02759)
தாம்பரத்தில் இருந்து வரும் 21ம் தேதி முதல் தினசரி மாலை இயக்கப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை ஹைதராபாத் செல்லும்.

புவனேஸ்வர் – ராமேசுவரம், வாராந்திர சிறப்பு ரயில்கள் (08496/08495), வரும் 23ம் தேதி முதல் இயக்கப்படும்.

மதுரை – பிகானிர், வாராந்திர சிறப்பு ரயில்கள் (06053/06054), வரும் 22ம் தேதி முதல் இயக்கப்படும்.

திருவனந்தபுரம் – கோர்பா, சிறப்பு ரயில்கள் (02648/02647), வாரம் 2 முறை வரும் 22ம் தேதி முதல் இயக்கப்படும்.

மேலும், இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது.