Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சோயா பீன்ஸ் – இல் போதை பொருளா? மக்களே உஷார்!

உலகத்தில் எவ்வளவோ பகுத்தறிவு வளர்ந்தாலும் இந்த போதை பொருள் தவறு என்பதை மக்கள் உணரவில்லை. ஒரு ஆய்வின் படி உலக இறப்பு விகிதத்தில் 40% இறப்பு போதை பொருள் உபயோகிப்பதால் என அந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.

போதை பொருளை தடை செய்தாலும் அதை கடத்தி விற்பனை செய்வதில் கை தேர்ந்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி இருக்க ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் துறைமுகத்தில் சரக்குப் பெட்டியில் கடத்தப்பட இருந்த 7600 கோடி ரூபாய் மதிப்புடைய கோகெய்ன் போதைப் பொருளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சோயா பீன்ஸ் என்று குறிப்பிடப்பட்ட பார்சலை அதிகாரிகள் சந்தேகம் கொண்டு சோதனையிட்டதில் உள்ளே 200 பைகளில் கோகெய்ன் பதுக்கப்பட்டதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் பார்சலை அனுப்பியது யார் என விசாரணை மேற்கொண்டனர்.

இதன் மொத்த மதிப்பு 7600 கோடி ரூபாய்க்கும் மேல் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்தப் போதைப் பொருள் பைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டு அழிக்கப்பட்டன.

திரையில் போதை பொருள் வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு என விளம்பரம் செய்தாலும் அதை பார்த்துக்கொண்டே புகை பிடிக்கும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறவாதீர்கள்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Exit mobile version